உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

37

இசைக்கருவிகளும் என்னிடமுள என்பதையும். ஒவ்வொரு வகையிலும் ஒன்றேனும் ஓரளவு இயக்குவேன் என்பதையும், அச்சில் முடிக்கல (கிரௌன்) அளவில் 200 பக்கம் வரும் 'இசைத் தமிழ்ச் சரித்திரம்' என்னும் நூலையும் சென்ற ஆண்டிலேயே எழுதி முடித்தேன் என்பதையும் நம் நண்பர் அறியக் கடவர் என்று எழுதுகின்றார். இக்கட்டுரை 1943 இல் வரைந்தது ஆதலால், அதற்குப் பன்னீராண்டுகளுக்கு முன் என்பது மன்னார் குடியில் அவர் பணியாற்றிய காலமாகும் என்பதை அறியலாம்.

இசையாசிரியர் யாழ்ப்புலவர் இராசகோபாலர்க்கு இசைத்த இசைப்பா:

“இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் எழில்முகத்தான் என்னிடை அன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள்

மன்னுக என்றன் மனத்து”

என்பது. இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை உயிர்க்கும்” என்னும் இசையின்ப இசைப் பாட்டு (6) இவர் இசையீடுபாட்டை விளக்கும் இணையிலாச் சான்றாம். "முதுமையும் நோயும் முழுதுற நீங்க வேண்டுமா இசையில்திளைக்க” என்பது இவர்தம் பட்டறிவு வெளிப்பாடே என எவரும் அறியக் கூடும்.

மன்னார்குடியில் இருந்த நாளிலே மற்றோர் நலப்பாடும் இவர்க்கு இயல்பாக வாய்த்தது. ஆங்குக் காவல் துறையில் ஆய்வாளராகத் திகழ்ந்தவர் தொல்காப்பியப் பெரும் புலவர் சோமசுந்தரம் என்பார். "மன்னார் குடியில் காவல் நிலையத்தில் தொல்காப்பியரைக் 'காக்கி' உடையில் கண்டேன்" எனப் பொறியல் அறிஞர் பா.வே. மாணிக்கரால் பாராட்டப் பட்டவர்இச்சோமசுந்தரர், அவர்தம் அணுக்கத் தொடர்பு, இலக்கணத்தில் எனக்கு எல்லை இல்லாத பைத்தியம் உண்டு" என்னும் தேவநேசர்க்கு எப்படி இருந்திருக்கும்!

இங்கிருந்த காலத்தே தான் சைவசித்தாந்தக் கழகத் தொடர்பும் உண்டாகித் தமிழ் வளமாகின்றது. செந்தமிழ்ச் செல்வியில் இவர்தம் முதற்கட்டுரை இக் காலத்தே தான் வெளிப்பட்டது. மொழியாராய்ச்சி (Comparative Philology) (வித்துவான் G.தேவநேசன் அவர்கள்) எனக்கட்டுரைத் தலைப்பும் ஆசிரியர்பெயரும் அதில் அமைந்துள்ளன (செந். செல். 9 : 275) 1931