உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சூன் சூலை இதழ் இஃதாகும். இதன்முகப்பின் நிறைவில் “எல்லா மொழிகட்குமுள் பெரும்பாற் சொற்களைப் பகுதிப் பொருளுடன் இயற்கை வடிவில் வழங்குவது தமிழேயென்று மொழிநூலால் (Philology) விளங்குகின்றது. அவற்றுள் ஆங்கிலம் (English) கிரேக்கு (Greek) லத்தின் (Latin) என்ற மும்மொழிகளிலும் சென்று வழங்கும் தென் சொற்கள் ஆயிரக் கணக்கின என்பதை ஐநூற்றுக்கு மேற்பட்டவற்றால் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் காட்டுதும்" என்று கூறிச் சொற்களை அவற்றின் விளக்கத்துடன் அகரவரிசையில் காட்டியுள்ளார்.

1931 இல் ஏற்பட்ட இத்தொடர்பே ஐம்பானாண்டுக் காலம் தொடர்ந்து பாவாணர் படைப்புகளுள் பலவும்தமிழுலகுக்கு வெளிப்படப் பெருந்துணையாயிற்றாம்.

கழகத் தொடர்பு என்பது பதிப்புத் தொடர்பு மட்டுமன்று. "7. இறையனார் அகப்பொருள், 2. தொல்காப்பியம் (நமச்சிவாய முதலியார்) மூலம், 3. தொல்காப்பியம் பொருளதிகாரம் 4. ஏடிட. நச்சினார்க்கினியம் பேராசிரியம் (பவானந்தர் கழகம்) 4. நன்னூல் மூலம் 2, 5. நன்னூல்விருத்தி சங்கர நமசிவாயர், 6. சிதம்பரப் பாடியல், 7. தண்டியலங்காரம் அ. குமாரசாமிப் பிள்ளை, 8. முத்துவீரியம் 9. பன்னிருபாட்டியல், பன்னிரு பாட்டியல் கிடையாதிருக்கலாம். முத்துவீரியம் கிடையா விட்டால் உங்களதை அனுப்பிவையுங்கள்.

குமாரசாமி நாயுடு கம்பெனியில் தொல்காப்பியச் சொல்லதி காரமும் பேராசிரியமும் கல்லாடமும் மூன்றாண்டுகட்கு முன்னமே அச்சில் இருந்தன. அவை வெளியேறியிருப்பின் அவற்றிலும் ஒவ்வொன்று வாங்கி உடன் சேர்த்து அனுப்புக. நான் கேட்ட நூல்கள் எல்லாம் என்னிடத்தில்இல்லை. முத்துவீரியம் கிடைக்கு மட்டும் உங்களதை அனுப்பி வையுங்கள். மிகப் பத்தரமாய் வைத்திருப்பேன்” (28-7-31); 29-7-31) என்கிறார். இலக்கணப் பைத்தியம் என்று தம்மைத்தாம் சுட்டுகிறாரே! அதன் விளக்கம் தானே இது! இறுதி நாள் வரை நூல்கள் வாங்கித் தரும் புரவாண்மைப் பொறுப்பைத் தட்டாமல்மேற்கொண்டது கழகம். அச்சான்றுகள் மிகப்பல. பாவாணர்க்கு நூல்கள் தருவித்துத் தருதலை பதிப்பகம் விற்பனை நிலையம் என்ற நிலைகளையும் கடந்து மேற்கொண்டமை - பாவாணர் தமிழ்த் தொண்டுக்கு உதவுவதைப் பேறாகக் கொண்டமையாலேயாம்.