உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

39

இம் மன்னார்குடியில் வாழ்ந்த நாளிலே பிற மொழி யாளர்க்குத் தமிழ் கற்பிக்கும் பணியும் மேற்கொண்டிருந்தார் என்பது ஓர் அஞ்சலால் வெளிப்படுகின்றது.

"தற்சமயம் ஒரு துரைசானிக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பது அது (23-10-31).

மன்னார் குடியில் 6 ஆண்டுகள் தொடர்ந்து இவர் பணி செய்தமை அருமையேயாகும். ஆங்கிருந்து வெளியேறவே இவர் பல்கால் முயன்றார் என்பது கடிதங்களால் தெரிகின்றது,

"வேலைக்கு மட்டும் கேடில்லை. பண்டிதர்க்குரிய உரிமையும் அதிகாரமும் எடுபட்டன"

"நான் சென்ற வாரமே வேலையை விடுதற்கிருந்தேன்; ஆனால் ஒரு பயனோக்கி பயனோக்கி இவ்வாண்டு முழுதும் இங்கிருக்கத் துணிந்தேன்”

"வாணியம்பாடி இஸ்லாமியா காலேஜுக்கு ஒரு வித்துவான் வேண்டுமென்று விடுமுறையில் ஓர் விளம்பரம் இந்துப் பத்திரிகையில் கண்டேன். அது இம்மாதம் 19ஆம் தேதி வரை இருந்தது. இங்ஙனம் நேருமென்று எண்ணவேயில்லை. இன்றேல் அன்றே விண்ப்பித்திருப்பேன். எல்லாம் இறைவன் செயல்'

(1-7-31);

66

'இந்த வாரம் எனக்குக் கொஞ்சமேனும் ஊக்கம் கிடையாது. எனக்கு இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன (18-7-31) "உலகம் அழுக்காறு நிறைந்தது" (29-7-31)

"என் முதற்றாய்மொழியை அச்சிடவேண்டும். அதன் பிறகுதான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும்'

(14-8-31)

"பலவிதத்தில் எண்ணிப் பார்க்கையில் இன்னும் இரண் டோராண்டு இங்கே கழிக்கலாம் என்றே யிருந்தேன். இனிமேல் வெளியேறிச் செல்வதாயின் 55 ரூபாய்க்குக் குறையாதிருக்க வேண்டும். அடுத்த ஆண்டில் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வேன். பரீட்சை தேறினபின் குறைவாராது" (23-10-31)

-

இத்தகைய நிலையில் மன்னார் குடியில் இருந்து பணி செய்து ஆறாம் ஆண்டில் தாமே வெளியேறினார்! வெளியேறிய நிலை எத்தகைய மாமாந்தர் இவர் என்பதை எண்ணச் செய்கிறது!