உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

பின்லே கல்லூரியின் வளர்ச்சி சுருங்கியது; இளங்கலை (B.A) வகுப்பு நின்றது; பின், இடைநிலை (Intermediate) வகுப்பும் தேய்ந்தது; உயர்பள்ளி நிலைக்குச் சுருங்கியது. கல்லூரியில் இருந்த முதுவர்கள் கீழே இறங்க இளையர்கள் வெளியேற வேண்டும் நிலை எழுந்தது. இளையருள் தலையராகச் செல்லவிருந்தவர் கோபால கிருட்டிணர் என்பார். அவர் வேலையின்றி மனைவி மக்களொடு வறுமையில் தவிப்பார் என வாடியது தேவநேயர் உள்ளம்! உருகியது! கோபால கிருட்டிணர் குடியிருந்த வீடும் மழையர்ஷஷால் இடிந்திருத்நது; இந்நிலையில் வெளியேற நேரின் பேரிடி யாகாதா அவரக்கென ஏங்கினார்; தாம் வெளியேறு வதாகவும், கோபாலகிருட்டிணர் அங்கேயே பணியாற்றலாம் என்றும் முந்து நின்று வெளியேறினார்! இவரல்லரோ தேவ நேயர்! தம்நிலையை எண்ணினாரா? குடும்பத்தை எண்ணினாரா? தாம் பெரும் வளப்பாட்டில் இருந்து வேலையை விட்டுத் தந்தாரா? அத்தகையரும் தருவரோ? கோபாலகிருட்டிணர் பிராமணர் என்பதும், "தம்கருத்துக்களுக்கு முற்றாக உடன்பட்டவர் என்பதும் பாவாணர் குறிப்பு. பாவாணர்நிலை எந்நிலை? "இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் 10 ரூ அனுப்ப முடியுமானால் அனுப்புக. கடன் கழுத்தை நெருக்குகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் என் 100 ரூபக்கடனையும் தொலைப்பீர்களாயின் அதுவே எனக்குப் பேருபகாரமாக இருக்கும்" (10-7-31)

"இப்போது 20 உக்குள் தயவு செய்து 10 ரூ அனுப்பி உதவுக. பணத்திற்குப் பெரிய முடை தாட் செலவுக்கும் தபாற் செலவுக்கும் கூடப் பணமில்லை. என் கடன் தொலைந்து விட்டால் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்" (14-2-31) என்று கழக ஆட்சியாளர்க்கு கடிதம் விடுக்கும் 'பெருவளமை'யில் பாவாணர் இருந்து கொண்டு தான் 'பணிக்கொடை' புரிகிறார் எனின், எளிதில் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி தானா!

3. மொக்கு

மன்னார் குடியில் இருந்து வெளியேறிய நேயர், திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்புப் பெற்றார். ஆங்கு ஒன்பது ஆண்டுகள் (1934 - 1943) பணியாற்றினார். மன்னார் குடியில் இசைத் தமிழ், இலக்கணம், மொழிநூற்பயிற்சி ஆகிய வற்றில் பெருங்கருத்துச் செலுத்திய பாவாணரின் திருச்சிப் பணிக்காலம்,

பன்மொழிகள் பயிலுதற்கும், நூல்கள்