உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

41

எழுதுவதற்கும், தமிழ்க்காவல் கடப்பாட்டில் நிலைப்படுதற்கும் உரிய ஏந்தாக அமைந்தது.

பாவாணர்

"மொழி நூற்பயிற்சி சென்ற பத்தாண்டுகளாக எனது சிறந்த பற்றாட்டாக இருந்துளது; இன்னுமிருக்கும்" என்று கூறும் திருச்சிக்காலத்தில் தான் ஒப்பியன் மொழி நூலை வெளியிடுகின்றார் (1940). மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரை நூல்களும் இலக்கண நூல்களும் வரைகின்றார். வேர்ச்சொற்சுவடி என்னும் 100 சொற்களுக்கு விளக்கம் கொண்ட சிறிய நூல் ஒன்றையும் இக்காலத்தோன் பத்தே நாளில் எழுதுகின்றார். இந்தி கட்டாயப் பாடமாக 1937 இல் புகுத்தப் பட்டமையால் அவ் வெதிர்ப்பில் அறிவுசார் பெரும்பங்கு கொண்டவர் பாவாணர்:

"நான் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியனாயிருந்த போது ஒருநாள் 6- ஆம் படிவ வகுப்பில் இந்திச் சொற்கள் பலவற்றின் தமிழ் மூலத்தையும் கூழைத் தன்மையையும்... விளக்கினேன்.

"விளக்கி முடிந்தவுடன் பாடம் நடத்தத் தொடங்கி இன்னும் எத்தனை பாட்டு நடத்த வேண்டும்" என்று மாணவரை வினவினேன். ஒருவன் அஞ்ச் பாட் என்றான்.உடனே எனக்கு, இந்தி தமிழ் நாட்டிற்கும் பொதுமொழியாக வந்தால் நாளடைவில் தமிழ் இந்நிலைதான் அடையும் என்னும் உணர்வு பிறந்தது. நான் சொன்ன இந்திச் சொற்களின் கூழை வடிவம் அம்மாணவன் உள்ளத்தில் ஆழப்பதிந்ததால் அவ்வச்சிலேயே அவனை அறியாது எழுந்த சொற்கள் ‘அஞ்ச் பாட்' என்பன. அவன் குறும்புத்தனமாகக் கூறியன வல்ல. அவன் குறும்பனு மல்லன்" (இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 19-20) என்று தம் வகுப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சுட்டுகிறார் பாவாணர்.

"கட்டாய இந்திக் கல்விக்கண்டனம் - செந்தமிழ்க் காஞ்சி' என்னும் நூல், காந்தியடிகளின் அட்டைப் படத்துடன் திருச்சிக் காலத்தில்தான் (1937) வெளிவந்தது. அதில் பாவாணர் பெயர், "தேசாபிமானத் தண்டமிழ்த் தொண்டன்" எனப் புனைவு பெற்றுள்ளது. அந்நாளில் பாவாணர் பேராயக் கட்சியைச் சார்ந்திருந்தார் என்பது மேல் வரும் கடிதம் ஒன்றால் விளங்குவதால், இப்பெயர்ப்புனைவு வறும்புனைவோ ஏமாற்றுப்புனைவோ அன்றென்று புலப்படும்!