உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

திருச்சியில் இருந்த காலத்தில் பாவாணர் செய்த தமிழ்க் காவல் தொண்டு விரிவான மூன்று மடல்களால் வெளிப்படுகின்றது. அச் செய்திகளை அறிந்து கொண்டால் பாவாணர் அழுந்திய, பிற்காலத் தமிழ்த் தொண்டுகளுக் கெல்லாம் மூலவ்ஷவைப்பாக அவை இருத்தல் துலக்கமாம். அவ்வஞ்சல்கள் கழக அமைச்சர் திருவரங்கனார்க்கு எழுதப்பட்டவை. கழக ஆட்சியாளர் வ.சு. அவர்கள் கோப்பின் வழி கைவயப்பட்டவை. முதல் அஞ்சல் : 74, புது அக்கிரா காரத்தெரு,

புதூர், திருச்சி

13-9-37

அன்பார்ந்த ஐயா,

நலம், நலமாக.

சென்ற 5000 ஆண்டுகளாகத்தமிழையே பேசித் தமிழாலேயே வயிறு வளர்த்து வரும் பார்ப்பனக் கயவர் சங்க காலத்திலிருந்து இதுவரை ஏராளமான தென் சொற்களையும் தென்னூல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை கொண்டு, நமக்கும் நமது முன்னோர்க்கும் முட்டாட்பட்டங் கட்டி அகமகிழ்ந்து தூற்றியது போதாதென்று மொழியையும் வடமொழி போல வழக் கொழிந்துச் சிதையும் படி வழியமைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலக் குடியரசிற்கும் இந்திக்கும் இயைபு கற்பித்து அதைச் சட்டசபைத் தேர்தல் நிகழ்ந்து பதவி பற்றும் வரை எழுதாக் கிளவியாக மட்டுமன்றி ஓதாக்கிளவியுமாக மறைத்துக் காத்துத் தீதுநலமறியாத கோடிக் கணக்கான பேதைமக்களின் நம்பிக்கையைப் பல வகை விரகு நெறியிற் கவர்ந்து இன்று நட்டாற்றிற் கழுத்தறுப்பது போலத் திடுமென இந்திக்கட்டாயக் கல்வியைத் தமிழரின் விருப்பத்தைக் கேளாது ஆங்கிலேயரினும் பன்மடங்கு ஆணவத் தோடும் அகங்காரத்தோடும் எடுத்தும் உரப்பியும் கனைத்தும் கூறி, இந்த அதிகாரங் குன்றிய நிலையிலேயே அரசியல் இயைபுள்ள தமிழன்பர்தம் கருத்தை வெளியிடாதவாறு அச்சுறுத்தி இந்தியை எதிர்க்கும் ஒருசிலர்க்கும் ஓநாய் ஆட்டுக்குட்டி நியாயமாக ஏதேதோ பொருந்தா விடைகளையெல்லாம் அளித்து, நம்மவும் நம் வழித்தோன்றல்களுடையவுமான வாழ்க்கையும் மொழியும்