உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

43

அறவே கெடுமாறு பல்கோடி மக்கள் தலையில் ஒருபெருங் கருங்கல்லைப் போட்டு முறைகேடாய் நசுக்கிக் கொல்ல வருகிறார்களே! நீங்கள் என்ன செய்தீர்கள்? துண்டு வெளியீடுகள் போதுமா? ஒருநாள் அல்லது சிலநாள் இன்னிசை ஊர்வலம் போதுமா? இராஜ கோபாலாச்சாரி இன்னும் தம் எண்ணத்தை மாற்றவில்லையே. அஃதாயின் உங்கள் முயற்சியால்பயன் என்ன? நெல்லை செந்தமிழ்ப் பாண்டி நாடல்லவா? சேலத்திலுள்ள செவ்வாய்ப்பேட்டைப் பைந்தமிழ்க் கழகத்தார் செய்தஅளவுகூட நீங்கள் செய்யவில்லையே! ஒருநாள் இருநாள் செய்து விட்டு, விட்டுவிட்டால், இது நாளடைவில்படுகிடையாய்ப் படுத்துவிடும் என்று கூறும் தமிழ்ப் பகைஞர் கூற்று உண்மையாகி விடுமே! மதத்தினும் நிலத்தினும் மொழி யல்லவா சிறந்தது? ஒருவன் தன் நாட்டையும்மதத்தையும் நினைத்தபொது மாற்றலாம். தாய் மொழியை முதுகாடுகாறும் மாற்றவும் மறக்கவும் ஒண்ணாதே!

தொல்காப்பியர் திருவள்ளுவர் மாணிக்கவாசகர் கம்பர் போன்ற உலகாசிரியர்களை நாம் காட்டிக் கொடுத்துக் கொல்லலாமா? ஆழ்கலத்தன்ன கலி அணுகும்போது நொடிப் பொழுதும் வீண்போக்கலாமா? தமிழாக்கம் பற்றிச் சிறந்த சூழ்ச்சிகள் என்வயமுள. எத்துணைப் பேரறிஞராய் இருப்பினும் உள்ளூரான் மதியான், உள்ளூரான் குற்றத்தைப் பார்ப்பான். குணம்பாரான். ஆதலால் அயலூர் அறிஞரை உடனுடன் வருவித்து அருந்தொண்டாற்றிப் பெருங்கிளர்ச்சி செய்க. எதிரிகள் கூறும் தடைகட்கெல்லாம் தக்கவிடைகள் என்கைவயமுள. போகவர 3-ம் வகுப்புச் செலவு கொடுத்தாற்போதும் வரத்தயார்.

நேற்றிருந்து 15 நாள் விடுமுறை. 7 ரூ. உங்கள் கழகத்தில் இல்லையா? நெல்லைத் தமிழரிடமும் இல்லையா? உண்டிச் செலவு நான் பார்த்துக்கொள்வேன். 7 ரூபாயும் இல்லையென்று பஞ்சம் பாராட்டுவீகளானால்நானே கடன் கொண்டேனும் வரத்தயார். உடனே தொலைவரி (தந்தி) விடுக்க. திருவருட்டுணை கொண்டு என் ஆராய்ச்சி அறிவால் பலரை வயமாக்க வொண்ணும்.

என்மொழியாராய்ச்சி நூல் அடுத்தமாதம் அச் சேறும்.

அதன்பின் தமிழ்த் தொண்டாற்ற நினைத்தேன். ஆனால், வீடுபற்றி வேகும்போது உடனே அணைக்க வேண்டும். வெந்தபின், கடலைத் திருப்பினாலும் வீடு திரும்பாது. வெள்ளிக்கிழமை இங்கோர் எதிர்ப்புக் கூட்டம் நிகழும். பாரதியார் அவர்கட்குத் தந்தி