உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

போயிருக்கிறது.

நான்

நெல்லை

வருவதானால்

படித்தவர்க்கொரு பெருங்கட்டடத்திலும் படியாதவர்க்கு வெளிநிலத்திலுமாக இருகூட்டங்கள் நிகழ்த்தலாம்.

ஞா. தேவநேயன்.

பாவாணர் நெல்லைக்குச் சென்றிருக்கிறார்; மூன்று பொழிவுகளும் செய்திருக்கிறார். அம்முயற்சி - விளைவு ஆகியவைபற்றியும் 5-10-37 இல் ஒரு கடிதம் வரைந்திருக்கிறார். எடுத்த பணியில் எவ்வளவு தொடுத்து முயல்கிறார் என்பது விளக்கமாகின்றது அக்கடிதத்தால். மேலும், தம் செயலை மீள்பார்வை பார்க்கும் பார்வையும் அதன்கண் தெளிவா கின்றது.

"நான் சென்ற மாதம் 19, 20, 21 ஆம் தேதிகளில் நெல்லை சென்று திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலுமாக 3 இந்தி எதிர்ப்புச் சொற்பெழிவுகள் நிகழ்த்தினன். பயன்படா விடினும் முதல் உழவென்று நினைக்க வேண்டியிருக்கிறது.

முதலாவது, கூட்டத்திற்கே நம்மவர்வரவிடாதபடி தந்திர மாகக் கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள். வந்தாலும் தூரநின்று கேட்பதே யொழியகிட்ட வருவதில்லை. அதுவுங்கூட நான் காங்கிரசில் சேர்ந்திருப்பதினால். இப்போது நாம் தமிழைக் காக்க வேண்டுமானால் முதலாவது காங்கிரசில் சேர்ந்து கதருடுத்த வேண்டும். சுயராஜ்யத்திற்கு ஒன்று சேர்ந்து இந்திக்கு உள்ளிருந்தே எதிர்க்க வேண்டும்; மற்றப்படி நம்மவரைச் சேர்க்க முடியாது.

"இந்த ஞாயிறு 10ம் தேதி சென்னையில் கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வரும் கேட்டை முற்றுமாராய்ந்து எவரும் ஏற்கும்படி தக் நியாயங்களும் விடை களும் கண்டுள்ளேன். தயவு செய்து அங்குப் போகவர முழுச் செலவை 7 ரூ கொடுக்க முடியா விட்டால் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன. இவ்வெள்ளி வெளிவரும், அதனுடன் வருவேன். ஓர் அனுபவசாலி சத்யாக்ரக முறை நன்றென்றார்; நாம் கூடி ஆராயவேண்டும்”

ரூ

இவ்வாறு வேற்றூர்களில் தொண்டாற்றத் தவித்த பாவாணர் திருச்சியில் செய்ய விரும்பிய பணிகளைப்பற்றிய கடிதம் தொடர்கிறது."

74, அக்கிராகாரத்தெரு புத்தூர்,திருச்சி

11-11-37