உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பார்ந்த ஐயா,

நலம். நலமாக,

பாவாணர்

45

நெல்லையிலும் பாளையங் கோட்டையிலும் இற்றை நிலையென்ன? நண்பர் பாரதியார் அண்ணா துரை முதலியோர் பேசிய பின்பு நம்மவர்க்குள் ஏதேனும் பெருமாறுதலுண்டா?

இங்கு, சிறியோரும் பெரியோருமான பெரும்பால் அபார்ப்பனர் தமிழ்மீது கடும்பற்று வைத்திருக்கின்றனர்.

ஆனால் அடிக்கடிகூட்டம் நடத்தவும் துண்டுத்தாள்கள் வெளியிடவும் ஏனமில்லை. பட்டிகளிலெல்லாம் புகுந்து வேலை செய்யத் தொண்டர்களுண்டு. ஆனால் பொருளுதவியில்லை. இங்குத் திருச்சிப்பண்டிதர்கள் பணமட்டுமிருந்தால் பெரிய வேலை செய்வோம். நம்மவர்கள் பெரும்பாலார் என்ன நடக்கிற தென்றே அறியாதிருக்கிறார்கள். காங்கிரஸ் வெறிபிடித்தவர்கள் பலரிருந்தாலும் அதிலுள்ள சூழ்ச்சிகளை எடுத்துச் சொன்னால் விழித்துக் கொள்கிறவர்கள் சிலருண்டு.

முதலாவது, பட்டிகளுக்குச் சென்று அவர்களுக்கு இந்திக்கேட்டை எடுத்துச் சொல்லவேண்டும். பட்டிவாசிகள் பெருந்தொகையினர், வீரமிகுந்தவர்கள்; பெருந்தொகையான வரி கொடுப்பவர்கள். அவர்கள் எதிர்த்து விட்டால் நகரங்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் முடியாது.

நான் சென்றவாரம் காய்ச்சலில்விழுந்து 8 நாளுக்குப் பின் தான் எழுந்திருந்தேன். அடுத்தவார முதல் அண்மையிலுள்ள சிற்றூர்களுக்குச் சென்று இந்தித் தீமை எடுத்துரைக்க எண்ணியிருக்கின்றேன். அதற்கென்று 35 கீர்த்தனைளு ளும்இயற்றி வெளியிட்டேன். டாக்டர் மதுரம் அவர்கள் 20 ரூ கொடுத்தார்கள். 1000 படிகட்கு 30ரூ ஆகிவிட்டது. சென்னைக்கும் சேலத்திற்கும் இந்தி எதிர்ப்புக்காகக் சென்றதில் 9 ரூ செலவாகி விட்டது. கீர்த்தனைகள் விரைந்து விலையாகுமென்று எண்ணினேன். விலை 1 அணாத்தான். பார்ப்பனரைத் திட்டுவதற்குப் பலர் கூடு கின்றார்களே யொழியத் தமிழன்பை எவ்விதத்திலாவது காட்டக் காணோம். 500 படிகள் தான் சென்னை சென்ற போது கழகத்திற்குக் கொண்டுபோய் விற்பனைக்காகக் கொடுத்தேன். இன்னும் பலபடிகள் விற்பனையாக வில்லையாம். உண்மையான தமிழன்பர் சென்னையில் 500 பேர்இல்லை என்று தெரிகிறது.