உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நெல்லைக்கு உங்களிடம் 100 படிகள் விலைக்கனுப்பி வைப்பதாக உங்கள் தம்பியார் சொன்னார்கள். அனுப்பினார்களா? விலையானவா? என்னிடத்திலுள்ள ஏனை 500 படிகளில் சிலவற்றை நாமக்கல்லிலும் தஞ்சையிலும் விற்கக் கொடுத்திருக் கிறேன். என் வசம் 300 படிகள் உள்ளன. இவை விலையானால் அதிற்கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு வேறு 35 பாடல்களுள்ள 2-ம் பாகத்தை அச்சிட்டு அடக்க விலைக்கே அரையணாவிற்கு விற்க எண்ணம். ஆனால் விலையான பாடில்லை, இப்பொழுதுள்ள பணமுடையும் அதன் பெருந்தேவையும் நினைக்கும் போதெல்லாம் நீங்கள் ஓர் எருமைக்காகச் செலவிட்ட 200 ரூ நினைவிற்கு வருகிறது. (பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில் எருமைப்பலியை விலக்குவதற்காக 1937 இல் செலவிட்டது:- நூலாசிரியர்) உலக முழுதும் நாள்தோறும் கணக்கற்ற ஆடுமாடுகள் உணவிற்காகக் கொல்லப்படுகின்றன. திருநெல்வேலி ஜில்லாவில் தமிழ்க்குப் பெருந் தொகையளிக்கத் தக்க பிரபுக்களும் ஜமீன்தார்களும் இல்லையா?

அடுத்தவாரம் இங்குச்சில கூட்டங்கள் நடத்த எண்ணி யிருக்கிறோம். டிசம்பர் விடுமுறையில் இங்கு நிகழும் தமிழன்பர் மகாநாட்டிற்கு நீங்களும் வள்ளல் அவர்களும் பிறரும் கட்டாயம் வந்து தீரவேண்டும்.

வேனில் விடுமுறையில் நெல்லையில் ஓர் தமிழன்பர் மகாநாடு கூட்டவேண்டும். அதற்கு நீங்களே பொறுப்பு ஒருமுறை இருமுறை சிலமுறை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கூட்டம் நிகழ்த்தி விட்டாற் போதாது.நம்மவர்க்குக் கண் திறக்கும் வரை இடைவிடாமல் கூட்டங்களும் மகாநாடுகளும் நடத்தியே தீரவேண்டும். இதுவரை பன்னூற்றாண்டுகளாக நமது முன்னோரும், பல்லாண்டுகளாக நாமும் விழிப்பில்லா திருந்தமைக்கு இன்று பெரும்பாடு படுகிறோம். இன்றும் நாம் அருந்தொண்டிற்கும் பெருமுயற்சிக்கும் பின் வாங்கினோமாயின் அணை கடந்த வெள்ளமாய் அழுதிறக்கும் காலம் நெருங்கிவிடும்.

தற்போது ஜின்னா செய்துவரும் கிளர்ச்சி நமக்குப் பெருந்துணையாயுள்ளது. அங்குள்ள மகமதியரை எவ்விதத்தும் துணைக்கொள்க. இங்குள்ள மகமதியர் ஜின்னாவைச் சார்பவர்கள். நம்மொடு சேரத் தயாராயுள்ளார்கள்.