உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

47

இச்சமயத்தில் நாம் இடைவிடாது வேலை செய்யவேண்டும். தமிழன்பர் மாநாட்டிற்குப் பெருந்தொகையினர் வந்து சிறப்பித்துத் தீர்மானங்களை வலியுறுத்த வேண்டுகின்றேன்.

தேவநேயன்.

திருச்சியில் பணிசெய்த நாளில் கழக வேண்டுதற்படி கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டார் பாவாணர். ஐந்து நாள்கள் பள்ளிவேலைக்கு; சனி ஞாயிறு நாள்களில் கலைச் சொல்லாக்கப்பணி எனத் திட்டப்படுத்திக் கொண்டு பணிசெய்ய அணியமாகிறார் பாவாணர்:

"நான் முன்னமே எழுதியபடி இந்தவாரம்சனி ஞாயிற்றில் (20ம் 27ம் தேதிகள்) கலைச்சொல்லாக்க எச்ச வேலையை முடித்து விடலாம். இல்லாவிட்டால் அடுத்த சனி ஞாயிறு

சனி ஞாயிற்றில் வைத்துக் கொண்டால் எந்தச் சனி ஞாயிறும் சரியே. முன்னதாக மட்டும் தெரிவித்து விடல் வேண்டும். கலைச்சொல்லாக்கக் கிளர்ச்சி பயன்பட்டுவருவது மகிழத்க்கது. இவ்வூரில் அடுத்தவாரம் ஒரு கண்டனக் கூட்டம் நடக்கும்" என்கிறார் (16-9-41) மேலே, திருச்சித் தமிழ்ப்புலவர்க் கழக மாநாடு பற்றித் தொடர்கிறார் பாவாணர்.

பிஷப் ஹீபர் உயர்நிலைப்பள்ளி, புத்தூர்,திருச்சி,

23-10-41

அன்பார்ந்த ஐயா.,

நலம், நலமாக.

தமிழறிஞர் கழகத் திட்டமும் தீர்மானமும் பற்றிய சுவடிகளும் விண்ணப்பத்தாள்களும் கைவயம். இங்கே திருச்சித் தமிழ்ப் புலவர் கழகம் என்ற கழகத்தை அமைத்து அதன் கூட்டம் ஒன்றில் வருகிற டிசம்பர் (1941) 20ம் 21ம் சனிஞாயிறுகளில் இங்கே சென்னை மாகாண 3-வது தமிழ்ப்புலவர் மாநாடு கூட்டுவதெனத் தீர்மானித்து வேலையும் தொடங்கி விட்டோம். மாநாட்டுக்குத் தலைமை தாங்குமாறு செட்டிநாட்டு இளவரசரைக்கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை.