உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

எல்லைக்குச் சான்றுகளை யெல்லாம் சுருக்காய்க் கூறி அச்சிட்டுப் பெருமக்கட் பெருமக்கட் கெல்லாம் அனுப்பிவிடலாம். பொங்கல் விடுமுறைக் குள்ளேயே பண்டிதர் ஆனந்தத் தையும் இராசமாணிக்கம் பிள்ளை அவர்களையும் கொண்டு எழுதுவித்து உடனே அச்சிட்டுவிடவும். நாயக்கர் ஈரோட்டில் இருக்கிறார். எழுதிக் கேட்க எனக்கழக ஆட்சியார்க்கு 10-1-46 இல் எழுதியுள்ள செய்தி பாவாணரின் எல்லைக் காப்புப் பற்றிய ஆர்வச் சான்றாம்.

சேலம் கல்லூரியில், இலக்கியமன்ற நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்ததாம். அப்பொழுது பொழிவுக்கு வந்தவர், “வசந்தசேனை என்பது எவ்வளவு சொல்லவும் கேட்கவும் சுவையாக இருக்கிறது; இதனை, "இளவேனிற் படை" என்றால் இன்பமாக இருக்குமா?" என வினா வினாராம். பாவாணர், "உம் தலைப்பைப்பற்றிப் பேசும்; அப்பால் போகாதீர்; தாயுமானவர் என்ற இனிய தமிழ்ப் பெயரை மாத்ரு பூதம் எனப்பெயர்த்து இராத்திரிப் பொழுதில் கூறினால் நடுக்கம் வந்து விடாதா" என்று தடுத்துரைத்தாராம்! இதனை 1974 இல் விளக்கிக்கூறிப் பாவாணர் பெருக நகைத்தநகை இன்றும் கண்முன்னே நிற்கின்றது! சேலம்பாவாணர் உள்ளத்தில் மிக ஒன்றிப் போய்விட்டதாகும்.

சேலத்திற்குப்போன ஈராண்டு கழித்ததும் அண்ணா மலைப் பல்கலைக் கழகப்பணி ஓர் அசைவு அசைத்தது பாவாணரை : திரு. சேதுப்பிள்ளை அவர்கட்குத் தலைமைப் பதவி கிடைத்து விட்டதாகக் கேள்வி. இரண்டாவது வேலைக்கு முயற்சி செய்ய வேண்டுமே! அதுவும் இன்னே செய்யவும் வேண்டுமே! எனக்குக் கிடைப்பின் என் நிலை உயர்வதோடு தமிழ்நிலையும் உணரும் என்பதற்குத் தடையில்லை. ஆயின், ஒவ்வொருவரும் இவ்வாறே நினைக்கலாம்" என 3-10-46 இல் எழுதுகின்றார்.

தக்க பணிக்கு உயர்ந்து செல்லுதற்கு உதவியாம் என்பது போல், மறைமலையடிகளார் சான்றொன்றை அவாவி யிருக்கிறார் பாவாணர். அவர் தகவுகள் அனைத்தும் நன்கு அறிந்து தெளிந்த வகையிலும், எதிர்கால நலப்பாட்டைக் கணித்துணர்ந்த வகையிலும் 1949 இல்அடிகளார் ஒரு சான்று வழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:

"பண்டித ஞா.தேவநேயனார் பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பிற்பற்றித், தமிழ்ச் சொல்