உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித்திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்" (செந்தமிழ்ச் செல்வி 44: 172 - 74).

5. மலர்

ல்

பாவணர் 1946 இல் அண்ணாமலைப்

பல்கலைக்

கழகத்திற்குச் செல்ல விரும்பிய முயற்சி செல்லவில்லை. அதன் பின் 1956 இல் மீண்டும் ஒரு தூண்டல் உண்டாயிற்று. அத்தூண்டல் வழியாக முயன்று, காலங்கடந்தேனும் நிறைவேறிற்றாயினும் அவர் விரும்பியவாறு பணி நிறைவேறிற்றில்லை. அதனைக் குறித்துப் பின்னாளில் தென்மொழி மாதிகையில் என் அண்ணா மலை நகர் வாழ்க்கை என்னும் தொடர் எழுதினார். அத் தொடர்பின்னர்ப் பாவாணர்பதிப்பகத்தின் வழியே தனிச் சுவடியாகவும் வெளிப்பட்டது. அதன் தொகைச் செய்தி இது:

1956 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை சூன் மாதம் ஏற்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர்முதலில் அமர்த்தப் பெறுவார் என்றும், முதற்கண்மேற் கொள்ளும் பணி, தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலித் தொகுப்பு என்றும் செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம் பாவாணர் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் வேர்ச்சொல் அகர முதலி அவரை யன்றி வேறெவராலும் தொகுக்க முடியாது ஆதலாலும் அவர்தம் உற்ற நண்பர் தூண்டுதலாலும் ஊக்கம் கொண்டு, துணைப்பேராசிரியப் பதவியினின்று நாளடைவில் பேராசிரியப் பதவிக்கு உயரலாம் என்னும் நம்பிக்கையுடன் அப்பதவிக்கு வேண்டுகோள் விடுக்கத் துணிந் துள்ளார். அந்நிலையிலே சேலங்கல்லூரி இராமசாமி மாணவர் விடுதியை அரசவயவர் முத்தையா அவர்கள் திறந்து வைக்க வந்துளர்.அந்நாள் முதல்வரும், பேரா. சொக்கப்பா முதலியோரும் பாவாணர் திறத்தை எடுத்துக் கூறியுள்ளன்ர. பிறர் பிறரும் பரிந்துரைத்து முள்ளனர். பல்வேறு தடையுற்று அமர்த்தோலை வந்தது. அதனை "ஓரளவு பசியடங்கினவன் பெற்ற உணவுபோல் பாவாணர் பெற்றுக் கொண்டுள்ளார்.

அமர்த்தோலையைத் தொடர்ந்து, அவர் பணியை மேற் பார்க்குமாறு வங்கநாட்டு வடமொழிப் பேராசிரியர்சுநீதிக் குமார