உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

63

சட்டர்சியைத் தலைவராகக் கொண்ட ஒன்பதின்மர் குழு ஏற்படுத்தப்பட்டமை அறிவிக்கப் பட்டிருந்தது. அக் குழுவில் தம்மளவு தமிழாய்ந்தவரேனும் தம் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவரும் இல்லாமையை உணர்ந்த பாவாணர், தம்மை அண்ணாமலை நகரினின்று விரைந்து வெளி யேற்றுதற்கு அமைந்த தள்ளி வெட்டி அஃதென்பதைக் கண்டு கொண்டார்.

கால்டுவெலும்

மாக்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருந் திருப்பின் அவர் மனநிலை எங்ஙனம் இருந்திருக்கும் என வெதும்பினார்.

பாவாணரின் அற்றை அகவை 54 ஆதலால், அதன் மேல் சேலங்கல்லூரியில் ஓரீராண்டுகளே பணி தொடர முடியும். அண்ணாமலைக்குச் சென்றால் ஐயாண்டேனும் ஈராண் டேனும் அலுவல் இருக்கும். அதற்குள் தமிழ் வேர்ச் சொல் அகர முதலியையும் ஒருவாறு தொகுத்து விடலாம். அதன்பின் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி என்றெண்ணி 12-7-56 இல் வேலையை ஒப்புக் கொண்டார். 250 - 25 - 500 உருபா என்னும் சம்பளத் திட்டத்தில் மாதத்திற்கு 250 உருபாவும் அரசியலார் விழுக்காட்டுப்படி அருந்தற்படியும் பெறும் நிலையில் ஆய்வு வகையால் ஓராண்டளவுக்கு உரிய அமர்த்தம் அது.

"திராவிட மொழியாராய்ச்சித் துறைக்குரிய ஐவருள் வாசகராக (Reader) நான்தான் அமர்த்தப் பட்டுளேன். பேராசிரியர், மலையாள, கன்னட, தெலுங்கு விரிவுரையாளர் ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டில் தான் அமர்த்தப்படுவார்கள். அகராதி வேலையும் அதன் பின்புதான் தொடங்கும். இன்று அதற்கு முற்படையான வேலை செய்து வருகிறேன். அதாவது செந்தமிழ்ச் சொற்பிறப்பு நெறிமுறைகளைத் தொகுத்தல். அது 200 பக்கத்திற்குக் குறையாது ஒரு தனிநூலாய் வரும். என் அலுவல் தொடர்பாக ஒரு திறவோர் குழு சட்டர்சி தலைமையில் அமைக்கப் பெற்றுள்ளது. சென்னையிலாவது இங்காவது அடிக்கடி கூடும் எனக் கடிதத்தில் (15-9-56) இக்கால நிலையைக் குறிக்கிறார்

பாவாணர்.

8-4-1957 இல் திராவிட மொழி நூல்துறைத் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டர்சி தலைமையுரை