உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

நிகழ்த்தினார். ஆங்கில வழியிலே தமிழைக் கற்றவர் ஆதலாலும் நன்னெறி முருகன் என்னும் தம் பெயரை மட்டுமே தமிழில் எழுதப் பயின்றவர் ஆதலாலும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர் உரையில் இந்திய நாகரிக மெல்லாம் சமற்கிருத இலக்கியத்திலேயே எழுதப் பட்டுள்ளது. ஆதலால் இந்திய நாகரிகம் ஆரியதே என்றார். இந்திய நாகரிகமெல்லாம் முதன்முதல் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ்விலக்கியம் முழுதும் இறந்துபட்டபின் அதன் மொழி பெயர்ப்பான சமற்கிருத இலக்கியமே மூலம் போற் காட்சி யளிக்கின்றது" என்று பாவாணர் மறுத்தார். அச்செயல் அவர்க்கும் பேரா. சேது முதலியவர்களுக்கும் எதிரிடையாயிற்று.

சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக 50 சொற்களுக்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதிக்காட்டுமாறு பணித்தனர். பாவாணர் இவற்றை எழுதத் தொடங்கிய காலையில் தேராதூனில் (Dehradun) நிகழும் கோடை மொழியியற் பயிற்சிக்குச் சென்று வருமாறு துணைக்கண்காணகர் உசாவியவாறு இசைந்தார். அதனால் வண்ணனை மொழிநூலின் (Linguistics) முழுப்பரப்பையும் கண்டார். தேர்விலும் வென்றார். அப்பயிற்சி தமக்கு எவ்வகையானும் பயன் படாது என்பதையும் அறிந்து கொண்டார். வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழி வழக்கும் ஆகரா, தில்லிக் காட்சிகளும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே இவ்வுலகில் தமக்கு என்றும் பயன் தரும் என்று கூறி, "இது பற்றி என் எதிரிகட்கும் நன்றி கூறும் கடப்பாடுடையேன்" என்கிறார்.

"டேராடூனில் மே 4 ஆம் நாள் அல்லது 6 ஆம் நாள் தொடங்கி 6 வாரம் பூனாடெக்கான் மொழிநூற்பள்ளியின் (DeccanSchool of Lingiuistics) சார்பாக ஓர் அமெரிக்க மொழிநூற் பள்ளிக்கு (Sum- mer school of Linguistics) திரு. இராதாகிருட்டிணனும் யானும் அனுப்பப் பெற வேண்டும். என்று எம் மொழிநூல் திறவோர் குழு பரிந்துரைத்திருப்பதால் அண்ணாமலைப் ப.க.க. சார்பில் யாம் இருவேமும் மே முதல் வாரம் ஆங்குச் செல்லவிருக்கிறோம் என்று 13-4-57 இல் எழுதும் பாவாணர், 4-5-57 இல் தாம் பயிற்சிக்களம் சேர்ந்ததை எழுதுகிறார்.

"இம்மாதம் முதல் நாட்காலை 11 மணி போல் புது டில்லி வந்து சேர்ந்தோம். முது டில்லியிலிருந்து டேராடூன் வண்டி