உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

65

இரவு 10.10 மணிக்குத்தான் புறப்பட்டது: அதிலேறி இங்கு நேற்றுக் காலை 8 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

சென்னையில் இருந்து புதுடில்லி வரையும் மாரி நாள் வீட்டிற்குள் இருப்பது போல் வசதியாக இருந்தது.

இங்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. செலவு தான் மிகுதி. அதோடு சமையல் முறையும் மிக வேறுபட்டுள்ளது. ஒரு பஞ்சாபியின் உண்டிச் சாலையில் உண்கிறேன்.

எம் பள்ளி இன்று பெயரளவில் தான் தொடங்கிற்று. வருகிற திங்கள் கிழமையில் இருந்துதான் (6-5-57) வகுப்புகள் ஒழுங்காய் நடக்கும்.

அன்பு கூர்ந்து உடனே பண்டாரகர் (Dr) சேதுப்பிள்ளை அவர்களிடம் ஆளனுப்பி ஒரு தொகுதி பல்கலைக்கழக அகராதியும் குண்டர்ட்டு மலையாள ஆங்கில அகராதியும் வாங்கிவைக்க. வேனிலுக்கு ஏர்க்காடு போவதாகச் சொன்னார்கள். ஆங்குப்போகு முன் வாங்கிவைத்துவிடுக.

(

கால்டுவெல் 3 ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்துவைக்க. சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க. The Holy shank பொருட்காட்சிச் சாலையில் கிடைக்காவிடின் மூர் அங்காடியில் வாங்கிவைக்க" என்கிறார்.

15-6-57 இல், “26 ஆம் நாள் புதுடில்லியில் இருந்து மாலை 5 மணிக்கு இன்னியல் (Deluxe) வண்டியேறி அங்குச் சென்னை நடுவண் நிலையம் 28ஆம் ஆட்சை தேதி) காலை 10 ணிக்கு வந்து சேர்வேன். இங்கு வந்ததினால் ஓரளவு பயனுண்டு" என்கிறார்.

1957 திசம்பர் 27, 28, 29 ஆகிய நாள்களில்தில்லியில் நடை பெற்ற அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டிற்குப் பாவாணர் சென்ற செய்தியும் ஒரு மடலால் (10-12-57) தெரிகின்றது.

இப்பயிற்சிக் காலத்தில் உத்தரப் பிரதேச (U.P) முசாபர்நகர் (Mujaffair nagar) சமற்கிருதப்பேராசிரியர் உனியால்என்பார் நட்பு வாய்த்திருக்கிறது. அவர் மகளார் கர்கி உனியால் (Gargi uniyal) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருத ஆராய்ச்சி மாணவியராக விரும்பினார். அதற்கு உதவும் பாவாணர், உனியால் என்னும் சமற்கிருதப்பேராசிரியர் மகளார்; பிராமணர் ; கர்கி உனியால் என்னும் பெயரினர். 20 ஆண்டு