உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

அகவையர்; 5 அடிக்குட்பட்டவர்: காதில் பொன் வளையத்தர்; சமற்கிருத எம்.ஏ. பட்டத்தினர்; இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமற்கிருத ஆராய்ச்சி மாணவியராக வருகிறார். அவர் தந்தையாரும் தமையனாரும் எனக்குப் பழக்க மானதினால் அவரைச் சென்னை யில் இருந்து அழைத்து வருமாறு முன்னரே சொல்லியிருக் கின்றனர். ஆதலால் ஆளனுப்பி இயலுமாயின் தாங்களே நேரில் சென்று grand trunk (பெருந்தடி வழி) Janatha (மக்கள்) இருவண்டியிலும் பார்த்து வந்திருப்பின் அழைத்துச் சென்று எனக்குத் தொலைவரியில் தெரிவிக்க. இதை எங்ஙனமும் தப்பாது செய்க" என வரைகிறார். (20-7-57) உதவியும் புரிகிறார். இது நிற்க.

பாவாணர் அண்ணாமலை மீண்டபின் போலிகைச் சொற்கள் 50 எழுதும் பணியில் மீளவும் இறங்கினார். அவர்பால் அன்பு காட்டிய பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதனார் "பர். சட்டர்சிக்குக் காட்ட வேண்டிய போலிகைச் சொற்பட்டியில் எள்ளளவும் கருத்து வேறுபாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தருக்கத்திற்கும் இடந்தராத ஐம்பது சொற்களையே சேர்க்க வேண்டும்" என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் பாவாணர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. "தமிழைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சவேண்டும்? இங்ஙனம் எத்தனை நாளைக்கு அஞ்சியஞ்சி அடிமைத் தனத்திலும் அறியாமையிலும் தமிழன்மூழ்கிக்கிடப்பது! ஆரியச் சார்பினர் கருங்காக்கையை வெண்காக்கை யென்று எத்தனை துணிச்சலோடும் திடாரிக்கத் தோடும் கூறிவருகின்றனர்." என்று எண்ணித் தாம் கருதும் சொற்களுக்கேவிளக்கம் எழுதி முடித்தார்.

சில மாதம் பொறுத்து பர். சட்டர்சி அண்ணாமலைக்கு வந்து அச்சுவடியைப் பார்வையிட்டார். எடுத்த எடுப்பிலேயே தமிழர் குமரிக் கண்டத்தினின்று வந்தவர் என்னும் உண்மை வரலாற்றுக் கூற்றையும், அச்சன் என்பது அத்தன் என்னும் தென் சொல்லின் திரிபென்னும் சொல் வரலாற்றையும் அவர் ஒப்புக் கொள்ள மறுத்து, நீ தன்னந்தனியாகப் போர்புரிகின்றாய் (you are fight-ing a lonelyfight - என்று கூறியிருக்கிறார். அவற்றுக்குத் தக்க விளக்கம் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் விரிவாக மறுமொழி எழுதியனுப்ப வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார். பின்னர், மொழிநூல் துறையினின்று பொதுத்