உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

67

துறைக்கு மாற்றப் பட்டிருக்கிறார் பாவாணர். “வடநாட்டுப் புகலிலி போன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநாள் திருந்தது" என்று தம் நிலையைக் கூறுகிறார் பாவாணர்."தாம் பொதுத்துறையில் இருந்தது ஓர் அரசியல் தூதன் அயல் நாட்டில் இருந்தது போன்றதே" என்றும் கூறுகிறார். மேலும், “சந்தையின் நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றிற்று" என்றும் குறிக்கிறார்.

சட்டர்சி சிலச்சில வேளைகளில் வணக்கம் என்று வடநாட்டுத்தலைவர்கள் சொல்லிக் கைதட்டு வாங்கிக் கொள்கிறார்களே தமிழ்நாட்டு மாநாட்டு மேடைகளில், அப்படி 'நன்னெறி முருகன் சாட்டர்ஜீ' என்று கையெழுத்துப் போடுமளவில், தமிழறிஞருக்கும் தமிழறிஞராகி விட்டவர். மாப்பெருந்தமிழறிஞர் செயற்கரும் பணியை மதிப்பிட்டுத் தள்ளிவிடும் தலைமையைக் கைவரப் பெற்றவர்! அவர்க்கு நெய்வேலி உ.த.க. மேலைக்கிளையினர் தமிழில் இரண்டு மடல்கள் விடுத்தனர். அதற்கு அவர்விடுத்த ஆங்கில மறுமொழிச் செய்தி இது:" 16, இந்துஸ்தான் பூங்கா, கல்கத்தா 29, 31-1-1972. அன்புடைய ஐயா, உலகத் தமிழ்க் கழக அலுவலகத்தில் இருந்து இன்று காலை இருதமிழ் மடல்கள் பெற்றேன். (அஞ்சல் நாள் 24- 1-72) நற்பேறில்லாத கரணியத்தால் நான் தமிழ் படிப்பதில்லை. அக் கடிதங்களை எனக்கு விளக்கஞ்செய்யக் கூடிய ஒரு தமிழன்பரைக் காணச் சிறிது காலமாகும். ஓர் ஆங்கில ஆக்கமோ செய்தியின் சுருக்கமோ பேருதவியாயிருக்கும்.

தங்கள் உண்மையுள்ள, சுநீதிகுமார் சாட்டர்ஜீ"

(முதன்மொழி. கதிர் 1. மணி 9-12) என வரைகிறார்.

"பர். சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ அவருக்கு இயலாது. தமிழைப்பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதிகுமார்,சட்டர்சி என்னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் நன்னெறி முருகன் என்று மொழி பெயர்த்து அவற்றைத் தமிழெழுத்தில் குறிக்கக் கற்றிருக்கின்றார். நெறி என்பது வழி அல்லது விதி. நீதியைக் குறிக்க அதினும் சிறந்த சொற்கள் நயம், நேர்மை என்பன.குமார் என்பது குமரன் (=முருகன்) என்னும் தென் சொல்லின் திரிபே.