உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

ஆயின், முருகன் ஆரியத் தெய்வம் என்பதும் முருகன் என்பது சுப்பிரமணியன் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் நம்பிக்கை. தமிழை ஆங்கில வாயிலாய்க் கற்றதனால், சில தமிழ் நூற்பெயர்களைக் கூட அவர்சரியாய ஒலிப்பதில்லை. பத்துப்பாட்டு என்பதைப் பத்துப்பத்து என்று அண்ணாமலை நகரில்ஒரு முறை படித்தார்." வேறிடங்களில் 'பட்பட்' என்றும் 'பட்டுப்பட்டு' என்றும் படித்ததாகக் கேள்வி' என்கிறார் பாவாணர் (என் அண்ணாமலை நகர் வாழ்க்கை. 32- 33). இவர் தாம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மதிப்பீட்டுக் குழுவின் தலைவர்! தமிழறியார், தமிழ்த்தலைமணி ஆய்வுக்குத் தனியதிகாரி! பின், முடீவு என்ன ஆகும்?

ஐந்தாம் ஆண்டு இறுதியில் துணைக் கண்காண கரைக்கண்டு மேலும் ஓராண்டு நீட்டிப்பின் சொற்றொகுப்பை முடித்துத் தந்து விடுவதாகக் கூறினார் பாவாணர். அவரும் இசைந்திருக்கிறார். அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் துணைக் கண்காண கர் மாறியிருக்கிறார். வந்தவர் நீட்டிப்புத் தர விரும்பினார் அல்லர். "1961 ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23 ஆம் பக்கல் அண்ணாமலைநகரை விட்டு வெளியேறினேன். என்னோடு தமிழும் வெளியேறியது" என்கிறார் பாவாணர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணிநலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்கும் பதிகம் பாடினார். அப் பதிகத்திலேயே, பாவாணர்க்குள்ள இடர்களையெல்லாம் உணர்ந்து அப் பதிக வழியாலேயே பல்கலைக் கழகத்தார்க்கு உணர்த்தியும் பார்த்தார். 'பாவாணரைப் போற்றுவதே பைந்தமிழைப் போற்றுவது என்றும் பாடினார்; நேரிடையாகச் சுட்டியும் குயிலில் எழுதினார்: "நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று கூவும்அதுவுமோர் குற்றமா? - பாவிகளே! தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர் யாவர்க்கும் செய்வதே யாம்

தேவநேயர்க்குத் தீமை வர இருப்பதை அறிந்து அல்லது வந்து கொண்டு இருப்பதை அறிந்துதானே பாடினார்! 'பாவிகளே' என்ற விளி எத்தகையது?

“திக்கற்ற செந்தமிழ்த்தாய் வெல்கவே வெல்கென்று

மெய்க்குழைக்கும் தொண்டர்மனம் வேகவே - வைக்கும்