உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

தடிப்பயல் யாவனே தப்புவான்? அன்னோன் நடுத்தெருவில் நாறும் பிணம்.”

69

ஆயிற்று?

எரிதழலாய் எழுந்த இந்த உணர்வு என்ன பாவாணரைக் காத்ததா? பகையைச் சாய்த்ததா? இல்லையே ஏன்? எங்கள் பகைவர் எங்கோமறைந்தார். இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்பதற்குரிய அடிப்படைதானும் தமிழர்க்கு அமைவது இல்லை! பகையென வேறு ஒன்று வருமுன்னரே, தமிழரேபகையாய் வீறி எழுந்து குடிகெடுக்கும் கூட்டுறவே குழும்பே - பெருகும் - நிலை, இற்றைத்தமிழ்ப் பட்டந் தாங்கிகளிட மேனும் பட்டறிந்த பின்னராவது உண்டாயிற்றில்லையே! அதனால் தானே, "நான் தமிழ்கற்ற அளவு ஆங்கிலம் கற்றிருந்தால் எருதந்துறையில் (Oxford) தலைமைப் பேராசிரியனாகியிருப்பேன். தமிழால்நான் பட்டபாடும் கெட்டகேடும் கொஞ்ச நஞ்சமல்ல. இறுதியில் என் உயிருக் குயிரான காதற் கற்பரசியை இழந்தேன். தலைக்கு மிஞ்சின தண்டனையில்லை. நீர்ச்சீலைக்கு மிஞ்சின நிரப்பில்லை” என்று 12-2-64 இல் அன்பர் வி. அ. கருணைக்கு எழுதுகின்றார் (நிரப்பாவது வறுமை)

-

பாவாணர்க்குப் பணிக்களம் ஓய்வு தந்துவிட்டது. உழைக்க ஆர்வம் இருந்தும் உழைக்க வேண்டும் பணி இருந்தும், அதனைப் பிறரெவரும் செய்யமுடியா நிலைஇருந்தும் - கட்டாயஓய்வு கிட்டிவிட்டது.அவர்பணிக்கு ஓய்வு உண்டா? அவரே கூறுகின்றார்:

"ஓர்உண்மை ஆராய்ச்சியாளன் ஒருநாளும் ஆராயாது இருக்க முடியாது. அவன் ஆராயாயவிடினும்அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென்றும் நனவென்றும் ஊண்வேளை யென்றும் உறக்க வேளையென்றும் இல்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பான இன்பந்தருங்கலைகள். வினைபற்றி எனக்கு எல்லா நாளும் வேலைநாள்

விழைவு பற்றி எனக்கு எல்லாநாளும் விடுமுறை நாள்

என என் அண்ணாமலை நகர்வாழ்க்கை என்பதில் கூறியுள்ளார்

(54).

"நான் ஏழுநாளும் பத்துமணிநேர வேலைக்காரன். சொந்த வீட்டில் செந்தண (Airconditioned) அறை அமைத்துக் கொண்டு முழுப்பகலும் வேலைசெய்வேன். இது எனக்கு இன்பமானது"

(16-4-80)