உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

"மொழி நூற்கல்வியும்ஆராய்ச்சியும்எனக்கு இன்பமான பாடத்துறை. அதனால், நான் இன்று பெறும் சம்பளம் 'கரும்பு தின்னக் கூலி'யாகும். ஆதலால், வேலை செய்யாது காலத்தைக் கழிக்கவோ வேறு வேலை செய்யவோ இயலவே இயலாது" (2-5-80) என்ப பாவாணர்தமிழ்க்குடும்பச் செயலாளர் அன்பு வாணர் வெற்றிச்செல்வியர்க்கு எழுதுகின்றார் பாவாணர். இவை பாவாணர் நினைப்பினும் ஓய்ந்திருக்க முடியா உண்மையை வெளிப்படுத்துவன!

'பாவாணர் நாற்காலியில்அமர்ந்திருப்பார். மிசை (மேசை) மேல்கைகள் ஊன்றியிருக்கும்; ஊன்றிய அக்கைகள் கன்னத்தைத் தாங்கியிருக்கும்; கைவிரல்கள் நிமிர்ந்து விரிந்து கன்னப் படலத்தில் படிந்திருக்கும்; கண்களோ மூடியிருக்கும்; இப்படி இருப்பது 10 நிமையம் 15 நிமையங்களா? ஒருமணி ஒள்றரை மணி என்று கூட இருக்கும்; இடை இடையே கால்கள் மெல்லென அசையும்; நெற்றிச் சுருக்கம்ஏறி இறங்கும்; ஓரொரு கால்வலக்கைப் பெருவிரல் வலக்கண்ணின் மேலும் நடுவிரல் மடக்கண்ணின் மேலும் சுட்டு விரல் நெற்றிப் பொட்டின் மேலும் முச்சுட்டாய் நிற்கும். அத் தவக்கோலம் நிறைவுற்றதா? கிடுகிடு என ஒரு பேராய்ச்சிக் கட்டுரை எழுத்துருப் பெற்றுப் பிறந்து விடும்!'

பகலா இரவா? அந்தியா சந்தியா? எவ்வேளையிலும் இத்தவம் கூடிவிடும். தம்மை மறந்த தமிழ்த் தவத்தில் பாவாணர் ஒன்றிய போதெல்லாம் என்னை மறந்து அக்காட்சியில் ஒன்றிப் போவேன்" (நாங்கள் காணும் பாவாணர்; தவம் செய்த தவமாம் நேயர் பக்14 -15) இவ்வாறு, தங்கருமம் செய்வார் தவம் செய்வாராம் நிலையர்க்குத் தமிழ்த்தவத்தை மூச்சுள்ள வரை விட்டு ஒதுங்கி இருக்க முடியாதே!

அண்ணாமலைப் பணி நீங்கிய பாவாணர்காட்டுப் பாடி சென்றார். ஆ 1135, 2- ஆம் மேற்குக் குறுக்குச் சாலை, காட்டுப்பாடி விரிவு, வடஆர்க்காடு மாவட்டம் என்பது முகவரியாயிற்று.

'எனக்கு இறையருளால் அண்ணாமலைப் ப.க. கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறை வாசகர் (Reader) பதவி கிடைத்துள்ளது. அடுத்தவாரம் ஆங்குச் செல்கின்றேன். சம்பளத் திட்டம் 250 - 25 -500 அடுத்த ஆண்டில் நடுவண் அரசியலாரும் 250 உருபா கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது" என்று "கல்லூரிப் புறவீடு, குமாரசாமிப் பட்டி, சேலம் 4-7-56"