உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

71

முகவரியில்,ருந்து எவ்வளவு மகிழ்வோடு வரைந்துள்ளார் பாவாணர்! அவர்தம் மீட்சி எத்தகைய தாயிற்று! இசைப்பாட்டும் இசைக்கிறார்;

என் அண்ணாமலை நகர் வாழ்க்கை எனத் தொடர் கட்டுரை வரைந்த பாவாணர், இசைத் தமிழ்க் கலம் பகத்தில் 'என் அண்ணமலைப் பல்கலைக் கழகப் பணி என்னும் பாடலில் அதனைத் திரட்டுப் பொருளாய்த் தருகின்றார்':

'புள்ளிக் கலாபமயிற் பாகன்' என்ற மெட்டு

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - என்றும் அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே

ஆரியம் வேரூன்றித் தமிழ்

சீரழிந்து போனதாரே கண்டார் - வெளிவிண்டார்,

திரவிட மொழியியல் துறையே - அங்குத்

திறந்தது வெள்ளிவிழா முறையே - தமிழ்

வேர்ச் சொல்வரிசை முதலே

சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார் - தாளிற் பெய்தார்.

தமிழுக்கு வந்தது நற்காலம் - என்று

தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த்

தலைமையிருந்தவர் அந்

நிலை யறிந்து வழி சூழ்ந்தார்- தமிழ்கீழ்ந்தார்

சட்டர்சி யென்னும் வங்காளியரே - அன்று சமைந்த குழுவில்மாபெரியரே - தமிழ்ச்

சார்புகொண்டென் வேலையைமேற்

பார்வை செய்ய வந்ததலங் கோலம்- கெடுகாலம்

தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் - அவர் தமிழ்ச் சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் - அது

தவறென்று விளக்கவும்

கவனியா திழுக்கென மறுத்தார் - மிக வெறுத்தார்

எதிரிகள் இதே யெதிர்பார்த்தார் - என்னை ஏனைத் துறைக்குத்தள்ளித்தீர்த்தார் - அங்கே