உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

இருந்து மூவாண்டின் பின்நான்

அருந்தமிழோடு வெளியேற்றம் - திடுமாற்றம்.

வேர்ச்சொற்களஞ்சியம் வேறாரும் - செய்யும் விறலுள்ளார்உண்டோவென்று பாரும் - வினை

வியங் கொள்ளா தென்னை யின்று

வினை செய்ய வில்லை யென்றார் மெய்யோ - சுயமையோ. 6. அலர்

பாவாணர் தம் பணிக்காலங்களை வகுத்தும் தொகுத்தும் காட்டியுள்ளார்:

"சீயோன் மலையில்உள்ள நடுநிலைப்பள்ளியில் முதற்படிவ ஆசிரியராக அமர்ந்து ஈராண்டு பணியாற்றினேன். அதன்பின், யான் முன்பு மாணவராயிருந்தஆம்பூர் சென்று அங்கிருந்த கிறித்தவப்பள்ளி உயர் பள்ளியானபின் அதில் 1922 ஆம்ஆண்டு உதவித் தமிழாசிரியராக அமர்த்தப்பட்டேன். 1924 இல்மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வெழுதித் தேறிய பின்னர் சென்னைத் திருவல்லிக்கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு உதவித் தமிழாசிரியராகவும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் மூவாண்டு தமிழாசிரி யராகவும் மன்னார் குடிப் பின்லேக் (Finlay) கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டும் திருச்சிப் புத்தூர் ஈபர் மேற்காணியார் (Bishob Heber) உயர்நிலைப் பள்ளியில் ஒன்பானாண்டும் முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டும் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பின் சேலங் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவனாக 1944 ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டேன். அங்குப் பன்னீராண்டு பணியாற்றிப் பேராசிரியனான பின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழி நூல் துறை வாசகனாக (Reader) அமர்த்தப் பெற்று ஐயாண்டிருந்தும்... செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் தொகுப்புத் தடுக்கப் பட்டு 1961 ஆம் ஆண்டு என் பதவியும் இழந்தேன்" என்பது 1970 இல் பாவாணர் எழுதிய தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தில் உள்ளது (பாவாணர் கடிதங்கள் பக்.175-6)

யான் ஓராண்டு நடுநிலைப்பள்ளியிலும் இருபத்தீ ராண்டு உயர்நிலைப்பள்ளிகளிலும், பன்னீராண்டு கல்லூரியிலும்