உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

73

தமிழாசிரியனாகப்பணியாற்றினேன். இவற்றுள் உயர்நிலைப் பள்ளி இரண்டும் கல்லூரி ஒன்றும் ஆக முக்கல்வி நிலையங்களே கிறித்தவ மதச் சார்பற்றவை. ஏனையவெல்லாம் கிறித்தவக் கல்வி நிலையங்களாதலின் அவற்றில் எளிதாய் எனக்கு வேலை கிடைத்தது.

உயர்நிலைப்பள்ளி யிரண்டனுள் முதலதுபிரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி, இரண்டாவது சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி... கல்லூரி, சேலத்து அற்றை நகராட்சிக்கல்லூரி...12-7-56 அன்றே அம்பக்க. வேலையை ஒப்புக் கொள்ள நேர்ந்தது.... 1961 ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23-ஆம் பக்கல் அண்ணாமலை நகரைவிட்டு வெளியேறினேன். இச்செய்திகள் என் அண்ணாமலை நகர் வாழ்க்கையில் காண்பவை.

முதற்படிவ ஆசிரியராக இருந்த ஈராண்டுப்பணி, தமிழாசி ரியப்பணி அன்று. ஆகலின் அதனை இருபத்திரண்டு ஆண்டுக் கணக்கில்பாவாணர்எடுத்துக்கொள்ளவில்லை. ஆம்பூர் நடுநிலைப் பள்ளியின் முதலாண்டுத் தமிழ்ப்பணியே 'யான் ஓராண்டு நடுநிலைப்பள்ளியிலும்' எனக் குறிக்கப்பட்டுளது எனக் கருதலாம். என் அண்ணாமலைப் பல்கலைக்கழக வாழ்க்கையில், குறிக்கும் பிரம்பூர்க் கலவல கண்ணனார் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஓராண்டுக் காலம் தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் என்பதில் குறிக்கப்படவில்லை. ஆங்குத்தாம் பணியாற்றிய ஆண்டுகளின் மொத்தக் கூட்டுதலும் இல்லை. இவற்றை நோக்க எல்லா நிலைகளிலுமாக 1961 வர 42 ஆண்டுகள் பாவாணர் பணியாற்றி யுள்ளார் என முடிவு செய்யலாம். அப்பொழுது அகவை 59.

பாவாணர் இளமையிலேயே கற்றிருக்கிறார். படிப்பு முடித்தகாலம் தொட்டு அகவை 59 வரைதொடர்ந்து பணியும் செய்திருக்கிறார். ஆறாம் படிவம் படித்துத் தேறிய அளவுடன் நில்லாமல் கலைமுதியர் தேர்வும் பெற்றிருக்கிறார். பண்டித புலவ வித்துவ விசாரத் பட்டங்களும் பெற்றிருக்கிறார். இவ்வளவு பெற்றும் பொருள் நிலையில் முன்னேற்றமோ - முன்னேற்றம் இல்லை எனினும் அடிப்படைத் தேவை நிறைவேற்றமோ- விரும்பத்தக்க பதவி வாய்ப்போ தமக்கென ஒரு குடியிருப்போ- அமைத்துக் கொள்ள முடியாமை ஏன்? அமையாமை ஏன்?

-