உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-2

95

கோயமுத்தூர்ச் சிறையில் இரண்டரையாண்டுகள் இருந்தார். பின்னர்க் கண்ணனூர்ச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் நல்லோர் துணை சிதம்பரனார்க்குத் தட்டின்றிக் கிடைத்தே வந்தது. 1912 டிசம்பர் மாதம் விடுதலை பெற்றார் சிதம்பரனார். நாலரை ஆண்டுக் காலம் சிறையில் இருந்தார்.

விடுதலை பெற்ற சிதம்பரனார் திருப்பேரூர் சென்றார். ஆங்கு ஒரு வங்கியிலே பணி செய்தார். பின்னர் இவர் சென்னை மயிலாப்பூரிலும் சிந்தாதிரிப்பேட்டையிலும் குடியிருந்தார். அதற்குப் பின்னர் ஒட்டப்பிடாரத்திலும் கோயிற்பட்டியிலும் தங்கினார். அப்பொழுது அமைச்சர் சர்.தி.நெ.சிவஞானம் பிள்ளையின் துணையால், நீதிபதி வாலேசுதுரை, சிதம்பரனார் மீண்டும் வழக்கறிஞர் பணி செய்யும் உரிமை ஆணை வழங்கினார். வழக்காடுதல், வண்டமிழ் ஆராய்ச்சி, சமூகச் சீர்திருத்தம், நூல் வெளியீடு ஆகியவற்றிலே தம் பொழுதை யெல்லாம் செலவிட்டார் சிதம்பரனார்.

துணைமாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் கோயில் பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு 1932ஆம் ஆண்டில் மாறியது. அதனால் சிதம்பரனாரும் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கேதான் இவர்தம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா அமைதியாகக் கொண்டாடப்பெற்றது. அதன் பின்னர் வழக்கு களை ஏற்று நடத்தமுடியாத அளவு தளர்வுற்றார். திருக்குறளுக்கு விருத்தியுரை எழுதுவதிலும் அதனை வெளியிடுவதிலும் பெரிதும் உழைத்தார்.

எத்தகைய வலிமை வாய்ந்தது என்றாலும் இரும்பு மண்ணில் கிடந்தால் 'துரு' ஏறி வலிமையழிந்து கெடும். அவ்வாறே எத்தகைய உடல் நலமும் உள்ள வலிமையும் உடையவர் ஆயினும் சிறைச்சாலை அவர்களை உருக்குலைத்து விடும். இந்நிலையில் பல ஆண்டுகள் சிறையுள் கிடந்து அல்லல் உற்ற சிதம்பரனார் உடல்நிலை விரைந்து கெடுவதாயிற்று. "படுத்துவிட்டால் பழைய நோய்களுக் கெல்லாம் கொண்டாட்டம்" என்பது போல் நோய்கள் வாட்டின. ஒரு திங்களுக்கு மேல் படுத்த படுக்கையாகவே இருந்தார். மருத்துவத்தால் இனி எதுவும் செய்யமுடியாது என்னும் நிலையை அடைந்தார். நாட்டு நலமே தம் நலமாகக் கொண்ட பெருந்தகை சிதம்பரனார் நல்லோர்