உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

உள்ளம் நைய ஒரு மாமணியாய் ஓங்கிய திருமைந்தனை இந்நாடு உணர்ந்து போற்றத் தவறியதே என்று வருந்த -தம் இறுதி மூச்சை 18-11-1936 ஆம் நாள் முடித்தார்.

இந்நாளில் வங்கக் கடலில் வீரர் சிதம்பரனார் பெயரால் அமைந்த கப்பல் கொடி கட்டிப் பறந்து உலா வருகின்றது. தூத்துக்குடியில் கலைக்கோயில்கள் எழும்பிச் சிதம்பரனார் புகழைப் பறையறைகின்றன. நாட்டிலுள்ள சோலைகள், தொழிற் சாலைகள், ஊர்கள், தெருக்கள், பல்வேறு அமைப்புகள் வஉசி.யின் திருப்பெயரை விளக்குகின்றன. இவ்வெல்லாவற்றுக்கும் மேலாக வஉசி உயிர்வடிவாக வீடுதோறும் விளங்கச் செய்வதே - கொள்கை வழி நிற்பதே அப்பெருமகனார்க்கு அழியா நினைவுச் சின்னமாம்.

தாய்நாட்டுப் பற்றில் இணையற்ற சிதம்பரனார் தாய் மொழிப்பற்றும் மிக்கவர். அப் பற்றால் அரிய நூல்கள் பலவற்றை இயற்றியும், பதிப்பித்தும் வெளியிட்டார். சிறையில் இருக்கும் போது தம் வரலாற்றைச் 'சுயசரிதை' என்னும் பெயரால் ஆசிரியப்பாவால் இயற்றினார். 'மெய்யறம்', 'மெய்யறிவு' என்னும் நூல்களையும் கவிதையிலேயே எழுதினார். இவையும் சிறையில் இருக்கும்போது எழுதப்பெற்றவையே யாம். பின்னர் 'அகமே புறம்', 'வலிமைக்கு மார்க்கம்', 'மனம்போல் வாழ்வு' என்னும் நூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தார்.

திருக்குறள் மணக்குடவர் உரை, தால்காப்பிய இளம்பூரணர் உரை, இன்னிலை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதற்கு விருத்தியுரையும் எழுதி அறத்துப்பாலை வெளியிட்டார். இந் நூல்கள் செம்மல் சிதம்பரனார்க்கு அமைந்த அழியா

உடல்களாம்!

சில குறிப்பான செய்திகள்

சிதம்பரனார்க்கு வழங்கிய தண்டனை மிகக் கொடுமை யானது. இதனை இங்கிலாந்தில் இருந்த இந்திய அமைச்சர் 'மார்லி' கூறுகிறார். எவருக்கு? இந்திய ஆட்சிப்பொறுப்பாளர் 'மிண்டோ'வுக்கு.

'சிதம்பரனார்க்கு வழங்கிய தீர்ப்பை நான் ஒப்ப இயலாது. இந்தப் பிழையையும் பேதைமைச் செயலையும் உடனே நீங்கள்