உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

97

ஆராயவேண்டும். கொடுமை அளவுக்கு மீறினால் ஒழுங்கு நிலைக்காது. வெடிகுண்டுக்கு அது வழி காட்டும்.'

எங்கிருந்தாலும் மாணிக்கம் மாணிக்கமே தான். சிதம்பரனார் கோயமுத்தூர்ச் சிறையில் இருந்தார். அச்சிறையில் சிறைத் தண்டனை அடைந்திருந்த ஆறுமுகம் பிள்ளை என்பவரும் வடுகு இராமன் என்பவரும் சிதம்பரனார் ஆங்கு வந்திருப்பதை அறிந்து, அன்று நள்ளிரவில் அவர் அறையில் கண்டனர். அதற்கு மேல் சிதம்பரனாரே கூறுகிறார்:

வந்தனர்; வணங்கினர்; வடைபழம் வழங்கினர்; உம்முடை ஆள்கள் ஒரு சிலர் ஈங்குளேம்;

ஒவ்வோர் இரவினும் உம்மையாம் காண்பேம் விடியற் காலம் ரவைஉப்பு மாவும் மதியமும் மாலையும் ரவைநற் றோசையும் அனுப்புவோம் அருந்துமின் அறியா மல்பிறர் என்று சில சொல்லி ஏகினர் அவர்தாம் சொல்லிய வண்ணமே செய்தனர் அவரும்; அவருரைப் படியே அருந்தினேன் யானும்; இரவில் வந்தவர் இன்புறப் பேசுவர்; பண்டம் வழங்குவர் பாரதம் பாடுவர்.

கடலிலே கப்பலைத் தள்ளியதற்காகச் செக்கைத் தள்ளும் தண்டனை தந்தார்கள் அல்லவா! அந்தச் செம்மல் சிதம்பரனார் சிறையை நீங்கி வந்தபோது, கப்பல்கழகம் 'தான் இல்லை' அக் கப்பலையாவது வேறு யாருக்கும் விற்றனரா? அவரைத் தண்டித்த ஆங்கிலக் கப்பல் கழகத்திற்கே விற்றனர்! சொல்ல ஒண்ணாக் கொடுமை இது. சிறைக்கு வெளியே இருந்தவர் செயல் இவ்வளவு தாழ்ந்தது என்றால், உள்ளே இருந்த சிறைக் கைதிகள் உள்ளம் எவ்வளவு உயர்ந்து இருந்தது!

“செக்கினை என்னோடு சேர்ந்து தள்ளியோர் 'நாங்களே தள்ளுவோம் நமன்கள் போன்ற சூப்பிரண் டெண்டு காட்சனும் செயிலரும்

வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்;