உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

போய்நிழல் இருந்து புசிமின் எள்ளும்

வெல்லமும்' என்றே விளம்பினர் அன்போடு".

சிறைச் சாலைக்குள் இருக்கும்போதும் சிதம்பரனார் சிதம்பரனாராகவே விளங்கினார். 'நாடு கடத்தப்படுவீர்' என ஒருவன் கூறினான். உடனே சிதம்பரனார்,

'ஆட்சியை இழந்தவர் அன்னியர் கையில் மாட்சியைப் பெற்றிட மறந்தும் நினைப்பரோ?”

என்றார்.

சிறையதிகாரி ஒருவன் சிதம்பரனார் இருந்த அறையின் முன் நின்றான்.சிதம்பரனார் அலுப்பால் அமர்ந்திருந்தார். அவன், "நின்றிட இங்கியான் நீவிர் இருப்பதேன்"

என வினாவினான். சிதம்பரனார்,

66

“ஏகுதற் காய, விதிவர விலை”

எனப் பதில் மொழிந்தார்.

ஒரு முறை சிறையதிகாரியைக் கண்ட சிதம்பரனார்

சிரித்தார். அவன்,

"சிரிக்கிறாய் ஏன்?'

என்றான்.

"அழச் சொல்கிறாயா? அது செயேன்”

என்றார் செம்மல் சிதம்பரனார்.

சிதம்பரனார்க்கு அவர்தம் அருமைத் திரு மனைவியார் கடிதம் விடுத்தார். அதில்சிதம்பரனார் கடிதம் எழுதியதாகச் செய்தி இருந்தது. "எமக்கு அறிவிக்காமல் நீர் எப்படி உம் மனைவிக்குக் கடிதம் எழுதலாம்?" என்றான் சிறை அதிகாரி. "நீ நன்று சொன்னாய்! என் கடிதம் வந்ததாக என் மனைவி பெயரால் எவனும் எழுதலாமே" என்றார். அதனைக் கேட்ட அதிகாரி,

"உன்னைத் தூக்கஇஃ தொன்றே போதும்"

என்றான். குலைநடுக்கம் கொண்டாரா சிதம்பரனார்?