உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

99

"பாக்கிய வசத்தால் தூக்கநீ சட்சலை”

என்று பதில் மொழிந்தார்.

சிதம்பரனார் நன்றியறிதலுக்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. கோவை அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் செய்த உதவியை நினைத்துத் தம் மைந்தருக்குச் சுப்பிரமணியம் எனப் பெயர் சூட்டியதும், வழக்கறிஞர் பணிசெய்ய ஆணையிட்டுதவிய வாலேசு என்னும் ஆங்கில நீதிபதியின் பெயரைத் தம் மைந்தர் ஒருவருக்கு 'வாலேசுவரன்' எனச் சூட்டியதும் அவர் நன்றியறிதலுக்கு நல்ல சான்றுகள் அல்லவா!

66

“கப்பலை ஓட்டிக் கடுங்காவற்கு ஆளாகி

உப்பிலாக் கூழ்உண்டு உடல் மெலிந்தோன் - ஒப்பிலாத் தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்

நன்னாமம் வாழ்த்துகவென் நா”

-கவிமணி.