உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய

முதலியார்

கவிமணி என்றால் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் என்பதைத் தமிழ் உலகில் அறியாதவர் இலர். அதுபோல் 'சிவக்கவிமணி' என்றால் அறியாதவர் சைவ உலகில் அரியர்.

சிவக்கவிமணி என்பார் கோவையைச் சேர்ந்த அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆவர். ‘சிவக்கவிமணி' என்பதற்கும் சி.கே. சுப்பிரமணியனார் என்பதற்கும் பெயரிலேயே ஒரு பொருத்தம் இருக்கிறது அல்லவா! பட்டம் வழங்கியவர் திறம்

அது.

தொண்டை நாட்டிலிருந்து கோவையின்கண் குடியேறிய ஒரு குடும்பத்தில் தோன்றியவர் கந்தசாமி முதலியார் என்பவர். அவர் கவிஞர்; புலவர்; வழக்கறிஞராக விளங்கியவர்; பன்னூல் ஆசிரியர். அவர்தம் அருமைத் திருமனைவியார் வடிவம்மை என்பார். இவர்கள் அருந்தவப் பெரும்பயனாகக் கி.பி. 1878ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இருபதாம் நாள் தோன்றிய திருமகனார் சுப்பிரமணியனார்.

"தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும்" என்பதும், "தந்தையறிவு மகன் அறிவு" என்பதும் பழமொழிகள். கந்தசாமியாருடைய புலமையனைத்தும் ஓருரு எடுத்தாற்போல விளங்கினார் சுப்பிரமணியனார்.

சுப்பிரமணியனார் இளமையில் திண்ணைப்பள்ளியிலே சேர்க்கப் பெற்றார். தந்தையாரும் அருந்தமிழ் வளத்தை வீட்டிலே தந்தார். ஈழ நாட்டிலிருந்து கோவைக்கு வந்து கோவைக் கல்லூரியில் கணக்கு ஆசிரியராக விளங்கிய வைத்தியலிங்கம் பிள்ளை என்பாரிடம் தனிக்கல்வி பெறவும் ஏற்பாடு செய்தார் தந்தை. “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி.” இதுதானே!