உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

சுப்பிரமணியனார் பெற்றுவரும் கல்விச் சிறப்பிலும், பண்புநலத்திலும் பெருமகிழ்வு பெற்றுவந்த கந்தசாமியார், நீண்டநாள் வாழ்ந்தார் அல்லர். அவர் சுப்பிரமணியனாருக்குப் பதினோராம் அகவை நடந்தபோதே காலமானார். தந்தையார் பெரும்பிரிவுத் துயரை முழுவதும் உணரக்கூடாத இளம்பருவம்! கல்விமேல் வைத்த காதலாலும் தாயின் அரவணைப்புச் சிறப்பாலும் மேற்கல்வியிலே மனம் ஊன்றினார் சுப்பிரமணியனார்.

கோவைக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் அவர் கற்றார். தம் தவத்தந்தையார் கந்தசாமியாரிடம் பயின்ற புலவர் பெருமகனார் திருச்சிற்றம்பலம் பிள்ளை என்பாரிடம் தமிழ் நூல்களைப் பாடங் கேட்டார். 1897ஆம் ஆண்டில் இடைக்கலைத் தேர்வில் (F.A.) வெற்றியடைந்தார். பின்னர்ச் சென்னை சென்று மாநிலக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் (B.A.) சேர்ந்தார்.

அக்கால வழக்கப்படி அந்த இளம்பருவத்திலேயே சுப்பிரமணியனார்க்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்தம் அன்புத் திருமனைவியார் பெயர் மீனாட்சியம்மை என்பது. அந்த இளம்பருவத்திலே தம் திருமணப்போதில் மணமகனார் ஒரு வெண்பா இயற்றினார்.

“கங்கைவல்லி மேவும் கனக சபாபதி

நங்கைமீ னாட்சிதனை நான்மணம்செய்-துங்கமிகு

நாள்விளம்பி ஆவணியின் நற்பதினொன் றார்குருவே வேள்வியொடு வேட்ட தினம்.”

இதில் மாமனார் ஊர்ப் பெயர், மாமனார் பெயர், மணமகளார் பெயர், மணநாள், மணமுறை எல்லாம் தொகுத்துக் கூறியமை காண்க. சுப்பிரமணியனார் திருமணம் நிகழ்ந்தது சேலத்தைச் சேர்ந்த 'கங்கை வல்லி' என்னும் ஊரிலாகும்.

மணமகளாருடன்

திருமணத்தின் பின்னர் அவன் சென்னைக்குக் குடியேறித் தம் படிப்பைத் தொடர்ந்தார்.1899ஆம் ஆண்டு இளங்கலைத் தேர்வில் தேறினார். அத் தேர்வில் தமிழில் சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேறிப் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யும் தேர்வில் ரூ. 120 பரிசு பெற்றார்.எப்படி? மொழி