உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

113

பெயர்ப்புக்குத் தரப்பெற்றது ஆறடிகளில் அமைந்த ஓர் ஆங்கிலச் செய்யுள். அதனைத் தமிழ் உரைநடையில் மொழிபெயர்த்தாரா? எட்டடியில் அமைந்த ஓர் ஆசிரியப் பாவாக மொழிபெயர்த்தார். தேர்வாளர் வியந்தனர். அதனால் தேடி வந்தது பரிசு!

பரிசுத்தொகையை உண்டிக்கும் உடைக்கும் செலவழித் தாரோ? "விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பதுபோல் அப் பணத்தைக் கொண்டு தம் ஆசிரியர் திருச்சிற்றம்பலனார் இயற்றிய 'மாணிக்கவாசகர்' என்னும் நூலை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அவ் வெளியீடு பின்னாளில் அருந்தமிழ் நூல்கள் பலவற்றை வெளியிடுதற்கு முன்னோடியாயிற்று.

இளங்கலையில் தேர்ந்த சுப்பிரமணியனார் தொழிற்கல்வி ஒன்றைப் பெற விரும்பினார். தம் தந்தையார் செய்த தொழிலே தமக்கு நினைவில் நின்றது. ஆதலால் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1903ஆம் ஆண்டு முதல் தம் உள்ளங்கவர்ந்த உரிமை ஊராம் கோவையில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.

79

சுப்பிரமணியனார் முதன் முதலாகக் "குற்ற" வழக்கு களையே எடுத்து நடத்தத் தொடங்கினார். ஆனால், அவை தம் உள்ளத்திற்குப் பொருந்தி வரவில்லை. ஆதலால் "உடைமை' வழக்குகளையே எடுத்துக் கொண்டார். அவ் வழக்குகளிலும் தக்கதை ஆராய்ந்து, தம் வருவாய்க்குப் போதுமான அளவுக்கே பணம் எடுத்துக்கொண்டார். வந்த வழக்குக்களையெல்லாம் எடுத்துக்கொண்டு அல்லல்பட்டார் அல்லர்.

கோவை நகரில் 'பிளேக்' என்னும் கொள்ளை நோய் முன்னே அடிக்கடி வந்தது. அக் காலத்தில் சுப்பிரமணியனார் தம் குடும்பத்துடன் திருகோயில்களுக்குச் சென்று வழிபட வெளியூர் களுக்குச் சென்றார்.குறிப்பாக இராமேசுவரம் செல்லுதல் அவர்க்கு மிக உவகை தந்தது. அவர்க்கு இயல்பாக இருந்த கடவுட்பற்றை இப் பயணம் மிகுதியாக்கியது. கோயிற் பணிகள் செய்தற்கும் அவரை ஏவியது. அதனால் கோவை வட்டக் கோயிலாட்சிக் கழகத்தின் தேர்தலுக்கு நின்றார். சட்டப் படிப்புப் படிக்கும்போதே அத் தேர்தலில் வென்று உறுப்பினரானார். பின்னர்த் தொடர்ந்து உறுப்பினராகவும் செயலாளராகவும்