உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

ருபதாண்டுகள் பணி செய்தார் (1902-1921). கவிமணியோடு 'சிவம்' சேர்வதற்கு அமைந்த பணி இது.

சிவக்கவிமணியின் தந்தையார் கந்தசாமியார் தம் இல்லத் திற்கு எதிரே ஒரு நிலையம் தோற்றுவித்திருந்தார். அதற்கு சைவப்பிரசங்கசாலை' என்பது பெயர். வாரம் ஒரு முறை சைவசமயச் சொற்பொழிவு அவரே நடாத்தி வந்தார். புலவர் திருச்சிற்றம்பலனார் கோவைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவித் தமிழ் வளர்த்து வந்தார். இவ்விரண்டு அமைப்புக்களும் பின்னர்ச் செயலற்றுக் கிடந்தன. இவற்றை உயிர்ப்பிக்கச் சிவக்கவிமணி கருதினார். அவர்தம் உழுவலன்பர் கோவைகிழார் இராமச்சந்திரன் செட்டியாரும் உறுதுணையாக அமைந்தார். இருவரும் கூடித் திட்டமிட்டுத் திறமாகக் கடமை புரிந்தனர்.

வாரச் சொற்பொழிவு நடத்துதல், மாணவர்க்குத் தமிழ்த் தேர்வு நடத்துதல், பரிசு வழங்குதல், நூல் நிலையம் தோற்றுவித்து வளம் பெருக்குதல் ஆகிய பல்வேறு பணிகள் புரிந்தனர். ஆண்டு விழாக்களும், பெரு விழாக்களும் அவ்வப்போது நடாத்தப் பெற்றன.நாடறிந்த பெருமக்கள் பலர் கோவைக்கு வருகை புரிந்து சிவநெறியும் செந்தமிழும் பரப்பினர்.

'சேக்கிழார்

சுப்பிரமணியனார் தம் இல்லத்திலே திருக்கூட்டம்" என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்று நடத்தினார்; திருக்கோயில் களுக்குப் பயணம் செல்லும் திட்டங்கள் வகுத்து நடாத்தினார். திருத்தொண்டர் புராண விரிவுரை முதலான சொற்பொழிவுகளும் நடத்தப் பெற்றன. இப்பணிகளால் கோவை நகர் சிவமணம் கமழ்வதாயிற்று.

தொண்டில் ஈடுபட்ட சுப்பிரமணியனார் புகழ் பரவு வதாயிற்று. இவர் நகர்மன்றச் சார்பிலே சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். தமிழ் அகராதி ஆலோசனைக் குழுவில் இருந்தும் அரிய பணிபுரிந்தார். அக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் 'சேக்கிழார்' என்பது பற்றி மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினார். அச் சொற்பொழிவு நூல் சேக்கிழாரைப் பற்றிய ஆராய்ச்சிக்கு முன்னோடியாக விளங்குகின்றது. இவ்வாறே, 'மாணிக்கவாசகர்