உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

115

அல்லது நீத்தார் பெருமை' என்னும் நூலும், 'திருத்தொண்டர் புராண விரிவுரை'யும் சுப்பிரமணியனாருடைய உழைப்புக்கும், ஆராய்ச்சித் திறத்திற்கும் சான்றுகளாம்.

அயரா

சிவக்கவிமணி அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் கலையில் கைவந்தவர். எத்தனை மணிநேரம் ஆயினும் கேட்பவர் விரும்புமாறு சுவையாகப் பேச வல்லவர். இன்னிசையுடன் டையிடையே பாடல்களைப் பாடியும் சிறந்த உவமைகளையும் மேற்கோள்களையும் எடுத்துரைத்தும் அரிய கருத்துக்களையும் எளிமையாக விளக்க வல்லவர் இலங்கைக்கு மும்முறை சென்று சிவநெறியும் செந்தமிழும் வளர்த்தார். தமிழகத்தில் மேடைகளும், மன்றங்களும், மாநாடுகளும் அவர்தம் உரைகளால் பொலிவு பெற்றன. தொண்டும், எழுத்தும், பேச்சும் ஒருங்கே அமைவது அருமை அல்லவா!

இயல்பாகவே சிவக்கவிமணியின் உடல் மெலிந்த தன்மையுடையது. ஆயினும், நோன்புகள் மிகக் கொள்வார். வேலை மிகுதியிலும், இறைவழிபாட்டிலும், ஆராய்ச்சிப் பணியிலும், ஊர்த் தொண்டிலும் உள்ளத்தைப் பறிகொடுத்து உணவை மறந்து போவார். ஆதலால் என்றும் மிக மெலிவுடைய வராகவே இருந்தார். ஆனால், உடலின் மென்மை போன்று இல்லாமல் உள்ளத்திண்மை பெரிதும் உடையவராக இருந்தார். ஆதலால் எண்ணிய செயல்களை எல்லாம் எத்தகைய இடையூறு நேரினும் தளராமல் செம்மையாக முடித்துச் சிறப்புப் பெற்றார்.

ஓயாமல் ஒழியாமல் எழுதுவதிலும் படிப்பதிலும் ஈடுபட்டாராயினும், மிக முதுமையிலும் கண்ணாடி அணிந் தாரல்லர். அவர்தம் பார்வை மிகத் தெளிவானது. எண்ணெய் விளக்குகளையே எழுதும்போதும் படிக்கும் போதும் பயன் படுத்தினார். எழுதுவதற்கு இறகு எழுது கோலைப் பயன் படுத்தினார். இவற்றால் அவர் மிக நன்மையே பெற்றார்.

சிவக்கவிமணியின் சால்புகள் அனைத்துக்கும் தகுதி வாய்ந்தவராக அவர்தம் இல்லக் கிழத்தியார் அமைந்தார். தம் கணவர் கருத்தறிந்து கடமை புரிந்தார். அடியாரைப் பேணுதல், விருந்தோம்புதல், வழிபாட்டுக்குத் துணை செய்தல் ஆகியவற்றில் ஒரு குறையும் வாராமல் எவரும் பாராட்ட வாழ்ந்தார். 1916ஆம்