உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

ஆண்டில் நோய்வாய்ப்பட்டு அவர் மனைவியார்

சேர்ந்தார்.

றையடி

நங்கை மீனாட்சியாரின் தங்கை ஒருவர் இருந்தார். அவர் பெயரும் மீனாட்சி என்பதே. அவர் சிவக்கவிமணியின் இரண்டாம் மனைவியானார். தம் தமக்கையாரைப் போலவே பாராட்டத்தக்க ல்லாளாக அமைந்தார். தம் கணவர் வாழ்வையே தம் வாழ்வாகக் கொண்டு சிறப்புற்றார். இவர்கள் இருவருக்குமே மக்கட்பேறு வாய்க்கவில்லை.

1938ஆம் ஆண்டில் சிவக்கவிமணி அவர்களுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ந்தது. 1948ஆம் ஆண்டில் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா திருப்பேரூரில் நிகழ்ந்தது. அப்பொழுது, திருத்தொண்டர் புராண உரை நிறைவு விழாவும் கொண்டாடப் பெற்றது.

சிவக்கவிமணி சீரிய உள்ளத் துறவு நெறி போற்றியவர். மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்துத் தலைவர் வழியாகத் துறவு நெறியைப் பெற்றார். அப்பொழுது, 'சம்பந்த சரணாலயத் தம்பிரான்' என்னும் பெயர் சூட்டப்பெற்றார்.

எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார் சிவக்கவிமணி. எண்பது ஆண்டு எய்தியவரை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று பாராட்டுவர். அப் பாராட்டுரைக்குத் தகுந்தவாறு வாழ்ந்த சிவக்கவிமணி தம் முதுமையில் 1961ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்து நான்காம் நாள் சிவனடி சேர்ந்தார். அவர் திருவுடல் திருப்பேரூர் பட்டிவிநாயகர் திருக்கோயிலின் பின்புறத்தில் குகைக்கோயில் அமைத்து அதன்கண் வைக்கப்பெற்றது. சிவக்கவிமணியாரின் புகழ் என்றும் வாழ்க!