உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

சிவக்கவிமணி அவர்களின் புகழ் மாலையுள் ஒன்று

“ஆங்கில மதனைப் பாங்குறக் கற்றுப் பட்டமும் பெற்றான்; சட்டமும் பயின்றொன்; தக்கோர் புகழும் வக்கீல் தொழிலினன்; தெய்வச் சிவமென மெய்வகை கொண்டோன்; சிவனடி யவரே அவனெனப் பணிவோன்; பன்னிரு திருமுறைப் பாரா யணத்தான்; இன்னிசை யோடவை இசைத்திட வல்லோன்; கேட்டார் தம்மொடு கேளா தாரும்

கெட்பேம் மன்எனக் கிளந்துநா வல்லோன்; என்பால் நண்புகொள் அன்பன்;

சுப்பிர மணியனாம் ஒப்பில்சீ மானே"

117