உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புலவர் முத்துசாமிக் கோனார்

கொங்கு நாட்டில் திருச்செங்கோடு என்னும் பெயருடைய மலை ஒன்றுள்ளது. அம் மலைப் பெயரே மலை சார்ந்த ஊர்க்கும் பெயர் ஆயிற்று.

செந்நிறமாக அமைந்த மலை செங்கோடு. அதனைச் செங்குன்று என்றும் வழங்குவர். 'கொடிமாடச் செங்குன்று' என்று திருஞானசம்பந்தர் செங்கோட்டுத் திருக்கோயிலைப் பாடினார்.

“கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர்”

என்பதும்,

"குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர்” என்பதும், ஞானசம்பந்தர் வாக்கு.

உமை ஒரு பாகனாக விளங்கும் இறைவனுக்கே அல்லாமல் திருமுருகனுக்கும் சீர்மை வாய்ந்த இடம் செங்கோடு ஆகும். அச் செங்கோட்டு வேலர் அருணகிரியாரால் அழகொழுகப் பாடப் பெற்றுள்ளார்.

"கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் பெருமாளே”

என்பது அருணகிரியார் வாக்கு. திருச்செங்கோட்டைக் கோடை, கோடை நகர், செங்குவடு, நாகமாமலை ஆகிய பெயர்களாலும் அருணகிரியார் வழங்கியுள்ளார்.

கொங்கு நாட்டுக்குப் பெருமை தரும் இச் செங்கோட்டிலே, கொங்கு நாட்டு வரலாற்றை எங்கும் பரப்பிய பெரும்புலவர் முத்துசாமிக் கோனார் தோன்றினார். இவர் தோன்றியது கி.பி. 1858ஆம் ஆண்டு ஆனித் திங்கள் ஆகும்.

அக்கால நிலைக்கு ஏற்றவாறு இளம் பருவத்தில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து எண்ணும் எழுத்தும் திருத்தமாகக் கற்றார். "கேட்டு எழுதி ஓதி வாழ்வார்" என்னும் முறைமைப்படி ஆசிரியர் கூறுவதைச் செவ்வையாகக் கேட்டும், சீராக எழுதியும் பல்கால்