உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே ஒரு விருந்து நடைபெற்றது. அவ்விருந்தில் பல புலவர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டனர். விருந்து நடந்தால், விருந்து உணவில்தான் எவர் நினைவும் இருக்கும்.! ஆனால், அங்கிருந்த புலவர்க்குத் தமிழ் விருந்திலே நினைவு சென்றது. அந்நினைவு 'விருந்தில் விருந்தாக' அமைந்தது.

விருந்து படைப்பவர் பெயர் 'இராமானுசம்' என்பது. அவர் படைக்க வரும்போது, தமக்கு வேண்டிய பொருளின் பெயரைக் கூறிச், 'சங்கொடுவா ராமா னுசம்' என்று முடியுமாறு புலவர்கள் வெண்பாப் பாடவேண்டும் என்று ஒரு திட்டத்தை வகுத்துத் தந்தார் அப்புலவர்.

புலவர்களின் எண்ணம் சாப்பாட்டில் இருந்து, பாட்டுக்கு மாறிற்று. ஒரு புலவர்க்கு 'ரசம்' வேண்டியதாக இருந்தது. அதனால்,

“ரசங்கொடுவா ராமா னுசம்”

என்று பாடி முடித்து ரசத்தை வாங்கிக் கொண்டார்.

இன்னொரு புலவர் அங்கே வழங்கப் பெற்ற அதிரசத்தைக் கண்டார். அதனால்,

66

'அதிர, சங்கொடுவா ராமா னுசம்”

என்று பாடி அதிரசத்தைப் பெற்றுக் கொண்டு அமைந்தார்.

அடுத்திருந்த புலவர்க்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இராமானுசம் "பாயசம்' கொண்டு வந்தார். அதனால்,

“பாய, சங்கொடுவா ராமா னுசம்'

என்று கேட்டு இனிப்பாகப் பாட்டை அவர் முடித்தார்.

பாட்டுத் திட்டம் வகுத்துத் தந்த புலவர் அடுத்தாற் போல் இருந்தார். அவர் "சங்கொடு வா" என்று கேட்பதற்குத் தக்க பண்டம் எதுவும் இல்லை. என்ன செய்வார்? அடி எடுத்துத் தந்தவரே