உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

முடிக்க முடியாமல் விடுவாரா? தமக்கு இராமானுசம் வழங்கிய கறியையே,

"இன்னுங்கொஞ், சங்கொடுவா ராமா னுசம்

99

என்று சொல்லிச் சுவையாகப் பாடி முடித்தார். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" என்னும் பழமொழியை மெய்யாக்கினார். 'சம்' என்று முடியக் கூடிய பொருள் ஒன்றும் அங்கு இல்லாவிடினும், 'கொஞ்சம்' என்பதில் 'சம்' இருப்பதையும், முன்னே வழங்கிய கறியை அது குறிப்பதையும் அறிந்த புலவர்கள் மிகப் பாராட்டினர். பாராட்டுக்கு உரியவராக விளங்கிய அப் புலவர் 'சோழ வந்தான் அரசஞ் சண்முகனார்' ஆவர்.

சோழவந்தான் என்னும் ஊர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். அது நிலவளமும் நீர் வளமும் நிறைந்தது. அதன் அறிவு வளத்திற்குச் சான்றாக தோன்றினார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

சோழவந்தானில் அரசப்பபிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர் புலமை நலம் சிறந்தவர்; பாடும் திறமை பெற்றவர்; வேளாண் தொழிலில் ஈடுபட்டு விருந்தோம்பி வாழ்ந்தவர். அவர் தம் அருமை மனைவியார் பார்வதி அம்மையார். இவர்கள் நல்வினைப் பயனால் நாடும் புகழும் நன்மகவாகச் சண்முகனார் தோன்றினார். அவர்க்குப் பின்னே இலக்குமி அம்மையார், தெய்வானை அம்மையார், இராமபிள்ளை, சதாசிவம் பிள்ளை, மீனம்மாள் என்பவர்கள் பிறந்தனர். சண்முகனார் பிறந்த நாள் 15-9-1868 ஆகும்.

சோழவந்தானில் தெற்குத் தெருவில் ஒரு பிள்ளையார் சோயில் உண்டு. அது சிதம்பர விநாயகர் கோயில் எனப்படும். முன்பு அக்கோயில் 'கல்மண்டபம்' என்று அழைக்கப் பெற்றது. அக் கல்மண்டபத்திலே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் நடந்தது. அதன் ஆசிரியர் அழகர்சாமி தேசிகர் என்னும் பெருமகனார் ஆவர். அப்பள்ளியிலே சண்முகனார் தம் கல்வியைத் தொடங்கினார். ஐந்தாம் வயது முதல் பன்னிரண்டார் வயதுவரை அங்கே கற்று அறிவுநலம் பெற்றார்.

சண்முகனாரில் அன்னையார் ஊர் பனைக்குளம் என்பது. அங்கே அரசப்பிள்ளை ஒருமுறை சென்றிருந்த போது 'சிவப்பிரகாச அடிகள்' என்னும் பெயருடைய செந்தமிழ்த் துறவியார் ஒருவரைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். அவர்தம் பண்புச் சிறப்பிலும், அறிவுத் திறத்திலும் அரசப்பர் ஈடுபட்டார்.