உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

நாளெல்லாம் நல்ல தொண்டுகள் செய்து வந்த கந்தசாமியார் தம் ஐம்பத்திரண்டாம் அகவையில் 1890ஆம் ஆண்டில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

இவரியற்றிய பச்சைநாயகியம்மை ஆசிரிய விருத்தம் என்னும் நூலில் ஒரு செய்யுளை அடியிற் காண்க.

“சீர்கொண்ட வதனமும் கார்கொண்ட முகிலெனத்

திரள்கொண்ட பைங்கூந்தலும்

சிலைகொண்ட கருவமும் விலைகொண்ட புருவமும்

செங்கையிற் கொண்டகிளியும்,

ஏர்கொண்ட பண்மொழியும் கூர்கொண்ட வேல்விழியும்

எழில்கொண்ட நுண்பணிகளும்

இடைகொண்ட கலையுமவ் விடைகொண்ட மேகலையும் ஏழ்கொண்ட புவித வியே,

தார்கொண்ட மணிமுடியும் நார்கொண்ட வடிகளும்

சயங்கொண்ட மால்முதலினோர்

தலைகொண்ட தேகமோர் நிலைகொண்ட பாகமும்

தனங்கொண்ட திருமார்பமும்,

பார்கொண்ட அடியரொடு நேர்கொண்டு நீசேவை

பாலிப்ப தெந்தநாளோ

பச்சிளஞ் சோலைதிகழ் உச்சிதப் பேரைவளர் பச்சைமர கதவல்லியே"