உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

155

அக்காலத்தில் இங்கிலாந்தில் எட்வர்டு அரசர் திருமுடி சூட்டுவிழா நிகழ்ந்தது. அந் நிகழ்ச்சியின் நினைவாக எட்வர்டு அரசரின் வரலாற்றை எழுதி, 'எட்வர்டு அரசர்' என்னும் பெயருடன் ஒரு நூலை இவர் வெளியிட்டார்.

கதைத் துறையிலும் தொண்டாற்றும் ஆர்வம் கொண்டார் திருச்சிற்றம்பலனார். தமிழ்ப் புலவர்கள் கதைத் துறையில் ஈடுபட்டுச் சிறப்படைய வேண்டும் என்றும்,அவர்கள் கதைத் துறையை ஏறிட்டுப்பார்க்காமையால் செவ்விய நடையில் வெளிப்படும் கதைகள் இல்லாமல் ஒழிகின்றன என்றும் உணர்ந்தார். அதனால், தாம் அவ்வகையில் வழிகாட்டல் கடமை எனத் தெளிந்தார்.

வங்காளத்தில் பெரும்புகழோடு விளங்கிய கதையாசிரியர் களுள் ஒருவர் பக்கிம் சந்திர சட்டர்சி என்பவர். அவர் எண்ணற்ற கதைகள் எழுதியவர். கதைத்துறையில் முடிசூடா மன்னரெனத் திகழ்ந்தவர். அவர் கதைகளையெல்லாம் வரன்முறையாகத் திருச்சிற்றம்பலனார் கற்றார். சில கதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தார். தாம் பெற்ற இன்பத்தைத் தமிழ் உலகமும் பெற வேண்டும் என விரும்பினார். அதனால் ‘ஆனந்த மடம்’, ‘சந்திர சேகரர்', 'பனங்குளம்' என்னும் கதைகளைக் கன்னித் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

சில குடும்பங்களில் வியக்கத்தக்க சில நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ்வது உண்டு. ஒரு குடும்பத்தில் எல்லாரும் இளமையிலே நரைத்த தலையராகத் தோன்றுவதையும், பிறிதொரு குடும்பத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் கூட நரை எட்டிப்பாராது இருத்தலையும் காண்கின்றோம். சில குடும்பங் களிலே நடுவயது வருமுன்னரே இறப்பாரையும், சில குடும்பங்களில் நூற்றாண்டை ஒட்டிவராமல் எவரும் இறவாமையையும் காண்கின்றோம். இத்தகைய நிகழ்ச்சிகள் 'குடும்பநிலை' என்று கூறப்படுவதையும் கேட்கிறோம்.

இவ்வாறு திருச்சிற்றம்பலனார் 'குடும்ப நிலை' வியக்கத்தக்க இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடமாக இருக்கின்றது என்பர். அவற்றுள்