உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முதுபெரும் புலவர் வெ. ப. சு.

குளிர் தூங்கும் குற்றாலம் உலகப்பெருமை வாய்ந்தது. அதற்கு அப் பெருமையைத் தருவது அங்கு ஒழுகும் அருவியே ஆகும். அவ் அருவிநீர் சிற்றாறு என்னும் பெயருடன் ஓடி வருகிறது. அச் சிற்றாற்றின் கால்கள் பல. அவற்றுள் வெள்ளப் பெருக்குடைய கால் ஒன்று. ஆதலால், அது 'வெள்ளகால்' எனப் பெயர் பெற்றது. அக் காலைச் சார்ந்த ஊரும் 'வெள்ளகால்' என்றே அழைக்கப்பெற்றது.

நீர்வளம் பெருகிற இடத்தில் நிலவளமும் பெருகும். ஆதலால், நெல்லும் கரும்பும் வாழையும் தென்னையும் வளமாக வளர்ந்து செல்வங்கொழிக்கும் சிறப்புப் பெற்றது வெள்ளகால்.

வெள்காலில் பழனியப்ப முதலியார் என்பார் ஒருவர் இருந்தார். அவர் கல்வியும் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். அருங்குணங்கள் எல்லாம் அமைந்தவர். திருநெல்வேலி மேடை தளவாய் முதலியார்க்கு உறவினர். அவர்தம் அருமைத் திருமகனாராக 14-8-1857 இல் தோன்றினார் சுப்பிரமணியம் என்பார். அவரே நம் முதுபெரும்புலவர் வெ.ப.சு. ஆவர்.

வெ. ப. சு. என்பது, வெள்ளகால் பழனியப்ப முதலியார் மைந்தர் சுப்பிரமணிய முதலியார் என்பதன் சுருக்கம் ஆகும்.வெ. ப. சு. பிறந்தமையால் வெள்ளகால் நாடறிந்த ஊராயிற்று. புலமையாளரைப் பெற்ற புகழுக்கும் இருப்பிடம் ஆயிற்று. பிறந்த மண்ணுக்குப் பெருமை தந்தவர் அறிஞர் வெ.ப.சு.

க்காலத்தைப்போல் அக்காலத்தில் ஊர்தோறும் பள்ளிகள் அமையவில்லை. சில பெரிய ஊர்களில் மட்டும் சிறிய திண்ணைப் பள்ளிக் கூடங்கள் நடந்துவந்தன. அங்கும் பணம் செலுத்திப் படிக்க வாய்ப்புடைய செல்வர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே கல்வி கற்றனர். திண்ணைப் பள்ளியாக இருந்தாலும் அங்குக் கற்பித்த ஆசிரியர்கள் இலக்கணம், இலக்கியம், கணக்கு, சோதிடம், மருத்துவம் முதலிய பல்வேறு துறைகளில் தேர்ச்சி யுடை யவர்களாக விளங்கினர். அப்பள்ளிகள் மண்டபங்கள்,