உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

'எண்பதாண் டான இளைஞனே! இன்னமுதின்

பண்பெலாம் காட்டுதமிழ்ப் பாவலனே! - நண்பனே!

வெள்ளகால் செல்வனே! வேள்சுப் பிரமணிய

வள்ளலே வாழ்க மகிழ்ந்து’

""

என்பது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய வாழ்த்துப்பா.

அரசினர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் முழுமையாகத் தொண்டிலே ஈடுபட்டார் வெ. ப. சு. அத்தொண்டுகள் அவர்க்கு அழியாப் பெருமை அளித்தன.

வாயில்லா உயிர்கள் அல்லவா கால்நடைகள்? அவற்றின் நோயை அறிந்து மருந்தூட்டிக் காப்பது அருஞ்செயல் அல்லவா! அப் பணியில் அறிஞர் வெ. ப. சு. காட்டிய திறமையை அரசினர் நன்கு அறிவர். அதனால் அவர் தொண்டினை நாட்டுக்குப் பயன்படுத்த விரும்பினர்.

அக்காலத்தில் வட்ட ஆட்சிக் கழகம், மாவட்ட ஆட்சிக் கழகம் என்னும் அமைப்புகள் இயங்கி வந்தன. இவற்றுள் வட்ட ஆட்சிக் கழக உறுப்பினராக வெ.ப.சு.வை ஆக்கினார். பின்னர்த் துணைத்தலைவர், தலைவர் ஆகிய பதவிகளையும் வழங்கினர். வெ. ப. சு. தலைவர் பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் முயற்சியால் அமைந்ததே கடையநல்லூர் உயர்நிலைப்பள்ளி என்பது அறியத்தக்கது ஆகும். இப் பொறுப்பில் வெ.ப.சு.நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

1922இல் இவரைத் தென்காசிக் குழு நீதிமன்றத் தலைவராக அரசினர் அமர்த்தினர். அப் பணியில் பலரும் பாராட்டுமாறு ஏழாண்டுகள் தொண்டு செய்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சில குழுக்களில் பொறுப்பேற்றுச் சிறப்பாகக் கடமை செய்தார்.

மேலும், வேலூரில் இந்தியக் கால்நடை மருத்துவர் சங்கம் என ஒரு சங்கம் தோன்றியது. அச் சங்கத்திற்கும் அரும்பணி பல செய்தார். திருநெல்வேலியில் தோன்றிய சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கச் சார்பில், தமிழ்க் கலைச் சொல்லாக்கக் கழகம் தோன்றியது. அக்கழகப் பணியிலும் தலைநின்று அருந் தொண்டு செய்தார்.

இவ்வாறெல்லாம் இவர் செய்த அரும்பெருந் தொண்டு களைக் கண்டு மகிழ்ந்த அரசினர் 'இராவ் சாகிபு' என்னும் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தினர். சென்னை மாகாணத் தமிழ்ச்