உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஒன்றும்

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

வாழ்த்துகள் படித்துக் கொடுக்கப்பெற்றன. நினைவு மலர் வெளியிடப்பெற்றது. பல்கலைச் செல்வர் கா. சுப்பிரமணியபிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை முதலாய சான்றோர் பலர் "பல்லாண்டு பல்லாண்டு வாழ்க" என வாழ்த்துரைத்தனர். தமிழகத்துப் பெருமக்கள் அனைவரும் திரண்டு வந்து தமிழ் வளர்த்த பெருமகனார் பெருவிழாவிலே கலந்து கொண்டு இன்புற்றனர்.

ஆண்டுகள் பத்து உருண்டன. தொண்ணூறாம் அகவை நடந்தது. ஓயா வாழ்வுக்கு ஓய்வு அருள்வது இறைவன் திருவருள் அன்றோ! அவ்வருள் வண்ணத்தால் 12-10-1946 இல் உலக வாழ்வில் இருந்தே ஓய்வு கொண்டார் திரு.வெ.ப.சு.

அறிஞர் வெ. ப. சு. அரிய நூல்கள் பலவற்றைத் தொகுத்து வைத்திருந்தார். விலை மதிப்பற்ற அச் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் எனக் கருதினார். தாம் இயற்றிய நூல்களால் வரும் வருவாயும் நாட்டு நல்லறிவு வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என நினைத்தார். அந்நினைவு திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் அறிஞர் வெ. ப. சுப்பிரமணிய முதலியார் நூல்நிலையமாகத் திகழ்கின்றது.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின்”

என்னும் பொய்யாமொழியைப் பொய்யாமொழியாக நிலை நாட்டினார் வெ. ப. சு.! அவர் திருப்பெயர் என்றும் வாழ்க!