உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

91

உலகளாவிய தொண்டால் தம்மை உலகத் தெய்வத் தாயாக்கி வரும் கன்னி அன்னை தெரேசாவை எண்ணுவோர், பெண் மையைக் குறுகிய வட்டத்துள் அடக்குவரோ? வேலு நாச்சியார், மங்கம்மாளார், சான்சிபாய் இன்னோரை எண்ணுவோர் பெண்டிர் அரசியல் சீர்த்தியை அளவில் குறுக்குவரோ?

தமிழர் சமயத்தில் உலகளாவிய பெண்டிர் பேசப்படு வானேன்?' என வினவலாம்! பெண்மை அன்புலகு! அருளுலகு! தொண்டுலகு! அவ்வுலகில் குறுக்கமில்லை! சுருக்கமில்லை! குறுக்கச்சுருக்க ஆண்மையே, பெருக்கத்தை தலையில் தட்டி வீட்டில் ஒடுக்கி நாட்டில் ஒடுக்கி உலகில் ஒடுக்கி வருகின்றதாம்.

ஆளுமை ஆடவர்க்குரிமையாய் இருந்தது. கல்வி ஆடவர்க்கு உரிமையாய் இருந்தது. வெளியுலகும் ஆடவர்க்கு உரிமையாய் ருந்தது. இவற்றை என்றும் தம் கைக்குள் வைத்துக் கொள்வதற் கென்றே திட்டமிட்டுத் திட்டமிட்டுத் தேர்ந்து கட்டுகளை உண்டாக்கிக்கொண்டது. வெளியுலகச் சாதிக்கட்டுகள் போல் வீட்டுக்குள்ளும் ஒரு தாழ்ந்த சாதிக்கட்டு ஆக்கிக் கொண்டது. அச்சாதி பெண்சாதி.

பெண்மையின் மென்மை ஆக்கத்திற்கா? அழிவுக்கா? ஆண்மையின் வன்மை ஆக்கத்திற்கா? அழிவுக்கா? பெண்மையை ஒடுக்குதற்கோ ஆண்மை முனைப்பு கொள்ள வேண்டும்! தன்னைத் தானே தானறியாமல் அன்றி அறிந்தே கெடுத்தகேடு; வழிவழி மரபைக் கெடுத்த கேடு. புறத்தார் தமிழரைத் தாழ்த்திக் கெடுத்தார் என்பது எவ்வளவு மெய்யோ அவ்வளவு மெய் இடைக்கால வு பிற்காலத் தமிழராம் அகத்தார், பெண்ணினத்தைத் தாழ்த்திக் கெடுத்தார் என்பது.

பெண்ணைப் பழித்த பாடல்கள் ஒன்றா இரண்டா, ஓராயிரமா ஈராயிரமா? குப்பையும் கொடு நாற்ற மலமும் அள்ளிச் செல்லும் நகராட்சி வண்டியளவுடையதன்றோ ஏடுகள்! ஒரு தாய் வயிற்றில் பிறந்தவன் - தாயைத் தெய்வமென வழிபடுபவன் அப்படிப் பழிப்பனோ? விரிவு வேண்டாவென அமைக.

களவு கற்பு என வாழ்வை நெறிப்படுத்திய அகப்பொருள் கண்ட நாட்டிலே அகவாழ்வு சீரழிக்கப்பட்டது. பரிசுப் பொருளா கவோ விலைப்பொருளாகவோ 'மணம்' நிகழ்வதாயிற்று! கல்விக்கும் செல்வத்திற்கும் தக மகற்கொடை (வரதட்சணை)