உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

93

"இக்காலத்தில் மனம் ஒவ்வாத ஒருவர் விலகிக் கொள் வதற்குச் சட்டம் இடம் கொடுப்பதாயிற்று.

66

'உலக நன்மைக்குரிய பெரிய செயல்கள் செய்வதில் பெண் களுக்குச் சுயாதீனம் முற்காலத்தில் இருந்திருக்கிறது". (மங்கையர்க் கரசியார் சான்று)

"தவம் செய்யும் பெண்டிர்க்குப் பெற்றோர்கள் திருமணத்தை வல்வந்தமாகச் செய்விக்கவில்லை.”

"பெண்கள் போதகாசிரியராய் வேலை பார்ப்பதில், பெண் கல்லூரிகளில் அவர்கள் அமர்தல்மிகவும் பொருத்தமாகும். அவர்கள் வழக்கறிஞர்களாய் இருப்பதற்குத் தகுதியுடையவர் களே.(கண்ணகியார் சான்று)

"அவரவர் ஆற்றலுக்கும் தன்மைக்கும் ஏற்ற தொழில்கள் செய்வதற்கும் வேலை நியமனம் பெறுவதற்கும் பெண் பாலர் என்ற காரணம் தடையாக இருத்தல் கூடாது.”

திருமணம் செய்து கொள்ளக்கூடிய வயதுள்ளவர் களாயும் விருப்பம் உள்ளவர்களாயும்இருக்கும் கைம் பெண்கள் மணம் செய்து கொள்வதால் இடையூறு ஒன்றுமில்லை."

"பல்வேறு குலத்தினர் குலத்தடையின்றிக் கலப்பு மணம் செய்வதற்குரிய சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அது விரைவில் நிறைவேற வேண்டும். கலப்பு மணச்சட்டம் கைம்பெண் மணத்திற்குத் துணைபுரியும்.

"கலப்புமணம் தமிழர்களுக்குள் இருந்ததென்பது சங்க நூற் செய்யுள்களால் தெரிய வருகிறது. சந்தரமூர்த்தி சுவாமிகள் சரிதம் அதற்குச் சான்றாகும்."

(6

கன்னி மணம் மிகுந்தவிடத்திலேதான் விதவை மணம் இன்றியமையாததாகும்.”

குடும்பக் கட்டுப்பாடு

'குடும்பக் கட்டுப்பாடு' என்பது இந்நாளில் பரப்பப்படாத இடமேயில்லை. செம்முக்கோணம் எம்மூலை முடுக்குகளிலும் காணும் காட்சி. மக்கட் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகள் மிகப் பலவாம் என்பது மெய்யே! எனினும் அதற்குரிய அறிவுறு மன