உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

வடக்கம் அறியாராய்ப் புறவழிகளில்புகுவார் படும் இடரும் கொடுமையாம்.

திருமணத் தரகர் போலவே குடும்பக் கட்டுப்பாட்டுத் தரகரும் பல்கி வருகின்றனர். பள்ளியாசிரியன்மாரும் அப்பணி தலைக்கொண்டு வாழ வேண்டும் கட்டாயமல்லாக் கட்டாய நிலை! மணமாகா இளவர்க்கும், மூத்துக் கழிந்த முதுவர்க்கும்கூட அறுவைச் செய்தி!

'புலன்' அறிவு; உணர்வு; புலக் கட்டுப்பாட்டால் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத்தக்க ஒரு நிலை நாட்டில் தோன்றவேண்டும். அத்தோற்றம் நாகரிக நயன்மைச் சான்றாம்! கருச்சிதைப்புப் பற்றியும் தம் கருத்தை நாட்டுகிறார் கா.சு.

"எளிய வாழ்க்கை வாழும் மக்களுக்குக் குழந்தைகள் மிகுதிப் பட்டால் பொருளாதாரம் குறைவுபட்டு இடர் விளையுமென்று எண்ணித் தற்காலத்தில் பெண்டிர் கருத்தரியாமல் இருப்பதற்குரிய தடைகளைப் பற்றிப்பல நூல்கள் வெளிவந்துள்ளன. கருவைச் சிதைப்பது குற்றமாகுமேயன்றிக் கருத்தரியாதிருக்க வழி தேடுவது பிழையாகாது. எனினும், அதற்குரிய உபாயங்கள் உடம்புக்கு உடனேயாதல் நாட்கழித்தாதல் ஊறு செய்யாதிருக்க வேண்டும். சிலவகைத் தடைகளால் உடம்புக்கு நோயும் துன்பமும் விளை கின்றன. மன அடக்கமே சிறந்த கருவியாகும். கருத்தரித்தற்குரிய காலத்தில் சேர்க்கையில்லாத் திருத்தல் நலமென்று சிலர் கருதுகின்றனர்.

கல்வி

மக்கள் முன்னேற்றத்திற்குக் கல்வி இன்றியமையாதது. அதிலும் வாழ்வியலுக்கு வேண்டும் பொருள் தேடுதற்குத் தொழிற் கல்வி கட்டாயமானது. பொதுக் கல்வி, தொழிற்கல்வி, தொழிற் சாலை வாய்ப்பு என்பன பற்றி யெல்லாம் மக்கள் முன்னேற்றம் கருதும் கா.சு. கருதுகின்றார்:

"இளமையில் கற்பது நன்றாக மனத்திற் பதியுமாதலால் நினைவு கூரத்தக்க பாடங்களை இளமையிலே அழுத்தமாகக் கற்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். ஏழு வயதில் சமயம் புகுதற்குரிய நெறிச் செயல்களைச் சுருங்கிய செலவில் நடத்தல் வேண்டும்.