உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

109

ம்மன்றாடியருள் தலைமன்றாடியார் பேராசிரியர் சங்கரவள்ளி நாயகர். அவர் மணி மன்றாடியார்; பன்மணி மன்றாடியார்! அவரோர் மன்றம்! மன்றம் எதைத் தரும்? மன்றத்தையே தரும். வள்ளிநாயக மன்றம் தந்த மன்றங்கள் பல. அவற்றுள் இரண்டு இராசை (இராச பாளையம்) மன்றமும், கோயிற்பட்டி மன்றமும். வை என்னையும் தம்முறுப்பாக்கி உரிமை செய்வன.

நாயகர் செய்து வரும் தனித் தமிழ்த்தொண்டும், வள்ளுவத் தொண்டும் தலைமேல் கொள்ளத்தக்கன, மன்றம் நடாத்துதலில் திறவோராய அவர் பலப்பல திறவோர்களைப் படைத்துப் பயனுறுத்தும் பான்மை பாராட்டுக்குரியது! செயலர் புலவர் படிக்கராமர், பேராசிரியர் முத்துராமலிங்கர், புரவலர்கள் இராம கிருட்டிணர், சங்கரலிங்கர் - இப்படி எத்துணைப் பேர்களை எண்ணுவது. அவர்கள் எண்ணமும் எழுச்சியும் என்னுள்ததும்பு கின்றன! அவர்கள் வாழ்க!

வள்ளுவர் மன்றம் பொழிவுக் கடன் மேற்கொண்ட தென்றால், அச்சீட்டுக் கடன் ஏற்றுக்கொண்டது எது? எது என்று சொல்லவும் வேண்டுமோ? கழகம்! கழகம்! கழகமே! நூற் பதிப்புக்கெனவே அறுபானைந்து ஆண்டுகளின் முன்னே தோன்றி ஏறத்தாழ ஈராயிரம் சுவடிகளைத் தமிழுலகுக்குத் தந்துள்ள கழகம், திருக்குறளின் பல்வேறு வெளியீட்டின் சிறப்பாலே தீந்தமிழ் உலகாட்சி கொண்டுள்ள கழகம், திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக் களைத் தமிழ் வைப்பாக்கி வழங்கி வரும் கழகம் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்! அதன் பெருமை தரு ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக் குமாரசாமி அவர்கள்.

நூற்காப்பிலே -நூற்றொகுப்பிலே - நூலகத் துறையிலே ணையற்ற பெருமகனார் அவர். அவர் தம் தகவு நூற்பதிப் பாண்மைக் கழக ஆட்சிக்கு அமைச்சராக ஆக்கிற்று. தமிழ்த் தென்றலை உலாவவிடும் அவர்க்குத் தமிழ்த்தென்றலாம் திரு.வி.க.வின் பேரன்பில் திளைத்த மு.வ.வின் பேரன்பில் திளைத்த மணவராம் அவர்க்கு - இஃது இயற்கையே எனினும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எளியேன் பொழிவுகள் எல்லாம் எழுத்துக்கள்! எழுத்துக்கள் எல்லாம் பொழிவுகள்! இவை, இரண்டு மூன்றாண்டுகளாக