உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் -25

தமிழ்க் காதலர்மேல் அத்தமிழ்க் காதலுக்காகவே காதல் கொண்ட ஒருவன், காதல் மொழி கூறின் அதனை ஆழத்துள் ஆழமாய் ஆய்ந்து பார்த்தல் உண்டோ?

காதல் எதுவும் நினையும்! எதுவும் சொல்லும்! எதுவும் எழுதும்! அதற்கு வரையென்ன! துறையென்ன! முறையென்ன!

அகக்காதல், களவு, அக்களவு, களவாக ஒழிதலைக் கருதாதது தமிழ்மண்! கற்பாக விளங்கவேண்டும் என்பதே தமிழ் மண்ணின் காதல். அதனால், 'களவின் வழித்தே கற்பென' இலக்கணம் கண்டது. இலக்கியம் படைத்தது. வாழ்வாங்கு வாழ நூல் செய்த வள்ளுவர் அத் தமிழ் வழக்கை விடுவரோ? வரிந்து கொண்டார்.

என் அகக் காதலை - உள்ளகக் காதலை - திரு.வி.க. காதலைக் கற்பாக்கிக் காட்ட விழைந்தது கோயிற்பட்டி, திருவள்ளுவர் மன்றம்! ‘மன்றம்' இன்றேல் 'மன்றல்' உண்டோ? மன்னல்தான் உண்டோ? என்னுள் மன்னிய காதலர் திரு.வி.க. மன்றுள் மன்னத் தலைப்பட்டார்!

நூல்கண்ட - நூல் தந்த நூலரை, மன்றில் எப்படி ஏற்றுவது? நூலரை நூலாய் ஏற்றுவதே நூன்முறை! பொழிவெலாம் நூலாக்கிய பொழிஞரைப் பொழியும் பொழிவும் நூலாதலே முறை! முறை கண்டேன்! ஆம் நூல் கண்டேன்! நூல் என்பதும் முறை என்பதும் நூன் முறை என்பதும் ஒரு பொருளவே.

66

நூலாக்கத்தில் புகுந்தேன். திரு.வி.க. தமிழ்த் தொண்டு எனப் பெயர் சூட்டினேன். அப் பெயராட்சியும் மன்றம் வழங்கியதே! 'அரசியல் உலகில் தமிழ்ச் சிந்தனையாளர்கள்" என்னும் பொதுத் தலைப்பில், தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்னும் சிறப்புத் தலைப்பு. ஆகலின் "திரு. வி. க. தமிழ்த் தொண்டு" என்பது மன்றந்தந்த தலைப்பேயாம்!

மன்றம் என்பது எது? மன்றத்தாரே மன்றம்! மன்றத்தார் இலரேல் மன்றமென ஒன்றுண்டோ? மன்றத்தார் ஒருவர் இருவரா? பலப்பலர்! பண்பட்ட பலப்பலர்! தழும்பேறிய செவியர்; தழும் பேறிய நாவர்; முருகிய நெஞ்சர்; தூக்கி மதிக்கும் துணிவும் துலக்கமும் மிக்கவர்! தொல்காப்பிய இலக்கணமா, தனித்தமிழ்ச் சொல்லாய்வா நான்குமணிப்பொழுதும் நயந்து கேட்டு நடுமை காணும் நீர்மையர்! எளியேற்குக் கேளும் கிளையுமாய்க் கெழுமியவர்.