உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

121

எல்லா வற்றிற்கும் காரணம் அறியாமையா? ஊழா? கடவுள் அருளா? சிலவேளை அறியாமை என்று தோன்றும்; சில சமயம் ஊழ் என்று தோன்றும்; சிலபோது கடவுள் அருள் என்று தோன்றும்.

பள்ளிப் படிப்பின் வீழ்ச்சியால் நல்லது விளைந்ததா? கெட்டது விளைந்ததா? என்ன விடை கூறுவது? இங்கே ஆராய்ச்சி வேண்டும். ஆராய்ச்சிக்குரிய பிற வாழ்க்கைக் கூறுகளை வெளி யிடுகிறேன்.

பள்ளிப் படிப்பு வெற்றி பெற்றிருப்பின், தொண்டுச்செல்வம், ஒரு வேளை தலைப்பட்டிருந்தாலும் இருக்கலாம்! பொருட் செல்வம் மட்டும் பெற்று தொண்டுச் செல்வம் அறவே துலங்காமல் போனாலும் பேயிருக்கலாம். ஆனால் பள்ளிப்படிப்பின் வீழ்ச்சி,

தாண்டுச் செல்வத்தையே வாரிவாரி வழங்கிற்று என்பது ஐயுறவின்றி மெய்ப்பிக்கப்பட்டமை, பிறவாழ்க்கைக் கூறுகளால் கையிடைக் கனியாய்த் துலங்குகின்றதாம்!

கல்வி என்பது பள்ளியின் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கி விடுவதோ? கற்றவரெல்லாரும் செந்தண்மைத் தொண்டுக்கு மீளா அடிமையாய் ஆளாதல் அந்நான்கு சுவர்களுக்குள் மட்டும் பயிற்றப்பட்டுவிடுவதோ? அப்படிக் கூடுவதாயின், எத்தனை எத்தனை திரு.வி.க. வை இந்தத் தமிழ் மண் பெற்றிருக்க வேண்டும்? எத்துணை எத்துணை அந்தண்மைச் செல்வங்களை வாரி வாரி வழங்கியிருக்க வேண்டும்?

1.வா.கு.42-43

2. QUIT. . 46

50-51.

3.வா.கு. 4.வா.கு.52.

5. QUIT.

கு.

58

6.வா.கு.59

7.வா.கு.60

8. QUIT. $.51

9. QUIT. §. 62.